Daily Routine To Make Teeth White Naturally : நமக்கு, அல்லது நம்முடன் பழகுபவருக்கு பிறருடன் சிரித்து பேசக்கூட பயமாக இருக்கும். காரணம், சிரித்து பேசினால் நம் மஞ்சள் பற்கள் வெளியில் தெரிந்து விடுமாே என்று பயப்படுவர். பற்களில் மஞ்சள் கறை வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சரியாக பல் துளக்காததால், சிறு வயதில் இருந்து சரியாக கவனிக்காமல் இருந்ததால், அடிக்கடி டி-காபி, கூல் டிரிங்க்ஸ் உள்ளிட்ட பானங்கள் குடிப்பதால் என இப்படி பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், அதை வெண்மையாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. மஞ்சள் கறை படிந்த பற்களை வெண்மையாக மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இவற்றை, தினமும் இரவில் செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
தினசரி பல் துலக்குதல்:
காலையில் எழுந்ததும் பல் துலக்கி, குளிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட சுத்தத்தில் அடங்கும். இதை தினசரி செய்வது ஒவ்வொருவரின் கடமை. ஆனால், பலர் செய்யும் தவறு என்ன தெரியுமா? இரவிலும் பல் துலக்காமல் இருப்பதுதான். பற்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க தினமும் இரவில் பல் துலக்குதல் அவசியம் ஆகும். பற்களை வெள்ளையாக்கும் டூத் பேஸ்டை உபயோகிக்க வேண்டும். காலையும் மாலையும் பல் துலக்கும் போது குறைந்தது 2 முதல் 3 நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும். அப்போதுதான் பல் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளும் சுத்தமாகும். எந்த கரைகளும் படியாமல் இருக்கும்.
பல் இடைவெளிகளை சுத்தம் செய்தல்:
பற்கள் அனைத்தும் இடுக்காக இருக்காது. ஒவ்வொரு பற்களுக்கு இடையேயும் கொஞ்சமாக இடைவேளை இருக்கும். இதை, சரியாக சுத்தம் செய்வது வாய் நாற்றத்தை குறைக்கலாம். பல் கறையும் வராமல் தடுக்கலாம். இதற்கு ஆங்கிலத்தில் flossing என்று பெயர் இருக்கிறது. பல் இடைவேளைகளை நூல் போன்ற ஒன்றை வைத்து, இந்த முறையில் சுத்தம் செய்வர்.
வாய் கழுவுதல்:
பல் துலக்கி முடித்த பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்படி கொப்பளிக்கும் போது வாய் முழுவதும் தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். கொப்பளித்து முடித்து, நல்ல தண்ணீரை எடுத்து குடிக்க வேண்டும். இது, உங்கள் வாய் வறட்சி பெறாமல் வைத்துக்கொள்ளும்.
கறைகள் படியும் உணவை தவிர்க்க வேண்டும்:
பலருக்கு பற்களில் கறை படிய காரணமாக இருப்பது, கறை படியும் வகையில் அவர்கள் சாப்பிடும் உணவுதான் என கூறப்படுகிறது. எனவே, இரவில் அல்லது அந்த நாள் முழுக்க அதிகமாக டி-காஃபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். ரெட் வைன் குடித்தல், புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும்.
பற்களை வெண்மையாக்கும் ஸ்ட்ரிப்ஸ்:
வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை பற்களை வெண்மையாக்கும் ஸ்ட்ரிப்ஸ்களை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கு முன்னர், வழிக்காட்டுதல்களை கவனமாக படிக்கவும்.
மேலும் படிக்க | பளிச் பற்களை பெற வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
தேங்காய் எண்ணெய்:
தினமும், 10-15 நிமிடங்களுக்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உங்கள் வாய்க்காக உபயோகப்படுத்த வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Oil Pulling என்று கூறுவர். தினமும் இரவில் இதை செய்வதால், உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும். வாய் சுத்தத்திற்கு வழி வகுக்கும் இந்த முறை, வாய் நாற்றம் வராமல் தடுப்பதோடு பற்களில் கறைகளும் படியாமல் பார்த்துக்கொள்கிறது.
தினசரி செய்ய வேண்டும்:
ஒரு சிலர், மேற்கூறிய முறைகளை ஒரு சில நாட்கள் செய்து விட்டு, பின்பு அது சரிவரவில்லை என்றால் உடனே அதை நிறுத்தி விடுவர். அப்படி செய்யாமல், தினமும் இதை செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து, வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வதும் நல்லது.
மேலும் படிக்க | பற்கள் ஹெல்தியா இருக்க... இந்த 5 விஷயங்களை பாலோ பண்ணுங்க...!
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ