எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவதன் காரணம் என்ன தெரியுமா?

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2021, 06:31 AM IST
எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவதன் காரணம் என்ன தெரியுமா? title=

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள்.

ஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது ‘ஓம்’ (OM) என்ற சொல். அ, உ,ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் "ம்' என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. "அ'' பிரம்மனையும் (Brahma), "உ'' விஷ்ணுவையும் (Vishnu), "ம'' ருத்ரனையும், "ம்'' சக்தியையும், அதன் நாதம் சிவ (Lord Shiva) பரம்பொருளையும் குறிக்கும்.

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது ‘ஓம்’. கலைஞானம் என்னும் கல்வியறிவு (Literacy), மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

ALSO READ | சிவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதனால் கிடைக்கும் பலன்களும்..!

எனவே தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு "என்றும் புதியது' என்று பொருள். ஆம்... கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் "என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News