இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி இன்னும் 4 நாட்களில் திறக்கும்

ஜோதிடத்தில், கிரகங்களின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2022, 09:29 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும்.
இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி இன்னும் 4 நாட்களில் திறக்கும் title=

புதுடெல்லி: சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் அதன் நிலையை மாற்றிக் கொள்கிறது. ஜோதிடத்தில், கிரகங்களின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றங்களில், 12 ராசியிலும் தென்படும். இந்த மாதம் 9 கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றிக் கொள்கின்றன. ஏப்ரல் 7, 2022 அன்று, செவ்வாய் கிரகம் மாறுகிறது. அதன்படி கும்ப ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வது 5 ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பல பெரிய பலன்களைத் தரும். பணமும், முன்னேற்றமும் அடைவார்கள். இந்த நேரம் முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால், மகிழ்ச்சியைத் தரும்.

மேலும் படிக்க | கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிரும், லாபம் பெருகும்

ரிஷபம்: செவ்வாயின் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தரும். பண வரவு உண்டாகும். பழைய கடனை அடைப்பதோடு வங்கி இருப்பும் அதிகரிக்கும். மொத்தத்தில், எல்லா வகையிலும் சுப பலன் கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால் வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் பெரும் லாபம் அடையலாம். குறிப்பாக சொத்தில் முதலீடு செய்வது நன்மை தரும்.

தனுசு: செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வேலையில் சுப பலன்களைத் தரும். இந்த நேரம் வேலை தேடுபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும். 

கும்பம்: ராசி மாறி கும்பத்தில் செவ்வாய் நுழைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அதிகபட்ச பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அடைவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி, குபேர யோகத்தால் செழிக்கப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News