கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிரும், லாபம் பெருகும்

ஏப்ரலில் நடக்கவுள்ள கிரகங்களின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2022, 03:40 PM IST
  • அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
  • புதிய வாகனம், வீடு வாங்கலாம்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிரும், லாபம் பெருகும்  title=

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் ஒன்பது கிரகங்களும் ராசியை மாற்றப் போகின்றன. 

இப்படிப்பட்ட நிகழ்வு து நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் ஒரு முறை நடக்கும். ஒரே மாதத்தில் 9 கிரகங்களும் ராசியை மாற்றுவது ஒரு அபூர்வ நிகழ்வாகும். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைகிறார். ஏப்ரல் 7ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். 

ஏப்ரல் 8-ம் தேதி புதன் கிரகம் மீன ராசியிலிருந்து மேஷ ராசி-க்கும் ஏப்ரல் 24-ம் தேதி ரிஷப ராசிக்கும் இடம் பெயர்கிறது. ஏப்ரல் 13-ம் தேதி குரு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். ஏப்ரல் 27ல் சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். ஏப்ரல் 28-ம் தேதி சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். ஏப்ரல் 12ஆம் தேதி ராகு மேஷ ராசியிலும், கேது துலா ராசியிலும் பிரவேசிக்கிறார்கள். 

இந்த அனைத்து கிரகங்களின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்:
பண வரவு உள்ளது. அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடினமாக உழைத்தால், வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். புதிய வாகனம், வீடு வாங்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி, குபேர யோகத்தால் செழிக்கப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள் 

விருச்சிகம்:
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்கள் நல்ல பெயரும் கவுரவமும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. தொழிலில் லாபம் காணலாம். பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். 

தனுசு:

கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். சமய, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பணியிடத்திலும், குடும்பத்தார் மத்தியிலும் கவுரவம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலை வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News