நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு: நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இது குறித்து (பெண்களின் முன்னேற்றம்) நிர்மலா சீதாராமன் தகவல் ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை, பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
'பிஎம் ஸ்வானிதி சே சம்ரிதி' (PM SVANidhi) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை வழங்கி பேசிய அவர், விலக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளை நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து, இத்திட்டத்தில் பயன்பெற உதவ வேண்டும். ஸ்வானிதி முதல் சம்ரிதி திட்டம் என்பது PM-ஸ்வாநிதி திட்டத்தின் கூடுதல் அங்கமாகும். இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசின் எட்டு திட்டங்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது என்றார்.
பயனாளிகள் ஆதார் அட்டையின் பயனைப் பெறுவார்கள்:
ஜன்தன்-ஆதார்-மொபைல் (JAM) மும்மூர்த்திகளின் தொடக்கத்தை நினைவுகூர்ந்த நிதியமைச்சர், ஆதார் அட்டையைப் பெற்ற பிறகு, ஒரு பயனாளி வங்கிக் கணக்கைத் தொடங்கலாம் என்றும், மத்திய அரசிடமிருந்து நேரடியாக அவரது கணக்கிற்கு நிதி உதவி அனுப்பலாம் என்றும், இதன் மூலம் இடைத்தரகர்களைத் தவிர்க்கலாம் என்றும் கூறினார். மத்திய அரசு ஒரு பயனாளிக்கு ரூ.100 அனுப்புக்கிறது என்றால், இதில் அந்த பயனாளிக்கு வெறும் ரூ.15 மட்டுமே கிடைக்கும், மீதமுள்ள ரூ.85 'இடைத்தரகர்கள் மற்றும் பிறர்' பாக்கெட்டுகளுக்கு சென்று விடுகிறது என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகழ்பெற்ற கருத்தை அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | வட்டியை அள்ளித்தரும் வங்கிகள்.. மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்
பெண்களுக்கு கடன் வழங்கப்படும்:
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் பின்னணியில், பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று சீதாராமன் கூறினார்.
பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம்:
சிறுதொழில் நடத்தும் அல்லது தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் வங்கியை அணுகலாம் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்று கூறியுள்ளார். இது தவிர, PM முத்ரா யோஜனா திட்டத்தில் கடன் பெற்று உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கலாம். எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் 100 பேரில் 60 பேர் பெண்களாக இருப்பர்.
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்:
"பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது." பிரதான் மந்திரி முத்ரா யோஜனா பிரதமர் மோடியால், கடந்த 2015, ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த திட்டம் துவக்கிப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தில் 3 வகைகளில் மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன.
முத்ரா திட்டத்தின் பயன்கள்:
இந்த திட்டத்தில் கடன் பெறுவதன் மூலம், வேலைவாய்ப்பு நீங்குகிறது. யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராக உயரலாம். சிறு வணிகர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். மேலும் வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. முத்ரா கடனுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதம் இல்லை. ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த வட்டியை வசூலிக்கின்றன.
மேலும் படிக்க | வங்கிக்கணக்கு இருக்கா? அப்போ உடனே ஆதார் கார்டில் இதை முடிச்சிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ