ஏப்ரலில் நிலை மாறும் 9 கிரகங்கள்; சில ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் தான்

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் பெரும் மாற்றத்தினால்  சில ராசிகளுக்கு  ஏற்படும் அமோகமான பலன்கள்  குறித்தும், சில ராசிக்காரர்களுக்கு ஏற்படும்  சில சிரமங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2022, 11:17 AM IST
ஏப்ரலில் நிலை மாறும் 9 கிரகங்கள்; சில ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் தான் title=

ஜோதிடத்தில் எந்த ஒரு கிரகத்தின் ராசி மாற்றமும்  12 ராசிகளையும் பாதிக்கும். ஏப்ரல் மாதத்தில் 9 கிரகங்களும் ராசி மாறப் போகின்றன. இந்த நிகழ்வு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் பெரும் மாற்றத்தின் பலன் சில ராசிகளில் சுபமாக இருக்கும் மற்றும் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எந்தெந்த கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

ஏப்ரல் ராசி மாறும் கிரகங்கள்

சந்திரன் ஒன்றரை நாட்களுக்கு ஒருமுறை தன் ராசியை மாற்றிக் கொள்கிறான். செவ்வாய் ஏப்ரல் 7 ஆம் தேதி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். புதன் ஏப்ரல் 8ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். 

சுக்கிரன் ஏப்ரல் 27ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். வியாழன் ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 12ஆம் தேதி ராகு மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். கேது ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் ஒரே நேரத்தில் ராசியை மாற்றுகிறார்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

ஏப்ரல் மாதம்  9 கிரகங்களின்  ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு அமோக பலன்களை கொடுக்கின்றன

மேஷம் - ஒன்பது கிரகங்களின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் நிலை காரணமாக, உங்கள் ஜாதகத்தில்  ராஜ யோகம் உருவாகும் எனலாம். இதனால் தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். புதிதாக எந்த ஒரு வேலையையும் தொடங்குவதாக இருந்தால் ஏப்ரல் 29ம் தேதிக்குள் செய்து முடிப்பது மிகவும் நன்மை தரும்.

ரிஷபம் - கிரகங்களின் ராசி மாற்றத்தால் உங்கள் ஜாதகத்தில் தன ராஜ யோகம் உருவாகி வருகிறது. ஏப்ரல் 27 அன்று, சுக்ர தேவன் உங்கள் லாப இடத்தில் உயர்வாக அமர்வார். இதனுடன் சனி பகவானும் இணைந்திருப்பார். இதனால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் பணம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மிதுனம் - ஏப்ரல் மாதம் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் ராஜயோகம் உருவாகும். அதனால்  எதிர்பாராத பண வர கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். புதிய வணிக உறவுகளை உருவாக்க நேரம் சாதகமானது. முதலீடு செய்வதற்கும் சாதகமான காலம்.

தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் சொத்து மற்றும் வாகன வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறியவுடன் தனுசு ராசிக்காரர்களுக்கு  நல்ல நேரம் தொடங்கும் எனலாம். உங்கள் ராசிக்கு அதிபதியான வியாழன் உச்சமாக சஞ்சரித்து  ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News