Lifestyle News In Tamil: ஆரோக்கியமான வாழ்வே நீங்கள் தேடும் அனைத்து வகையான செல்வங்களை விடவும் முதன்மையானது எனலாம். இந்த கருத்து திருக்குறள் காலத்தில் இருந்து தற்போது சிலம்பரசன் காலம் வரை தொடர்கிறது எனலாம்.
இந்தியன் 2 பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தபோது நடிகர் சிம்பு இவ்வாறு கூறியிருந்தார், நாம் வைத்திருக்கும் அனைத்தும் ஒருநாள் போய்விடும், நம்மோடு இருக்கும் மனிதர்கள் கூட ஒருநாள் போய்விடுவார்கள், ஆனால் உங்களோடு கடைசி வரை இருக்கப்போவது உங்களின் உடல் மட்டும்தான், எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வந்தது.
உடல்நலமும், மனநலமும்...
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆரோக்கியம் என்பது வெறும் உடலுக்கு மட்டுமின்றி, மனநல ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் காலையில் சில விஷயங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உடல் மட்டுமின்றி மனமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆன்மீக ரீதியாகவும் நீங்கள் மன அமைதியுடன் விளங்குவீர்கள்.
மேலும் படிக்க | எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!
காலையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அந்த நாளை சிறப்பாக கட்டமைக்க நீங்கள் போடும் உறுதியான அஸ்திவாரம் ஆகும். உங்கள் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க காலையில் இந்த 7 விஷயங்களை உங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாற்றுங்கள். இதனை உங்களின் வாழ்க்கைமுறைக்குள் கொண்டு வந்து அன்றாடம் இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் மட்டுமே அந்த சிறப்பான பலனை பெற முடியும். அந்த வகையில், தினமும் காலையில் செய்ய வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இதில் காணலாம்.
7 முக்கிய விஷயங்கள்
1. அதிகாலையில் எழுதிருப்பது உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும். நீங்கள் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுதிருப்பது என்பது உங்களுக்கு பல விஷயங்களில் உதவிக்கரமாக இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் படிப்பதாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சி மேற்கொண்டாலும் சரி எது செய்தாலும் அதில் 100 சதவீதம் பலன் கிடைக்கும். நீங்கள் ஆன்மீக ரீதியாக கூட சில பழக்கவழக்கங்களை இந்த நேரத்தில் மேற்கொள்ளலாம். எனவே உங்களின் நாளை சிறப்பாக கட்டமைக்க அதிகாலையில் எழுதிருப்பது நல்லது.
2. காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் அருந்துவது நல்லது. உங்கள் உடலில் 60% நீர்ச்சத்தால் நிரம்பியது, எனவே தண்ணீர் வாழ்வில் மிக அவசியமாகிறது. நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைவலி, எரிச்சல் ஆகியவை ஏற்படும். நீங்கள் காலையில் எழுந்து தண்ணீர் அருந்தினால் உடலில் நீர்ச்சத்து பெருகும், உடலில் இருந்து கெட்ட விஷயங்கள் வெளியேறும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், செரிமானத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.
3. உங்கள் மனநலம், உடல்நலம் என அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க மூச்சுப் பயிற்சி என்பது மிகவும் முக்கியமானது. மூச்சுப் பயிற்சிகள் பல வகைகளில் இருக்கின்றன, அதற்கு வல்லுநரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இது உங்களுக்கு அமைதியையும், நிதானத்தையும் அளிக்கும். மேலும் இதனை செய்தால் காலையிலேயே உற்சாகமாகவும், எனர்ஜியாகவும் காணப்படுவீர்கள். காலையில் இதற்காக வெறும் 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். உங்களின் மற்ற வேலைகளிலும் நீங்கள் அதிக கவனத்துடன் இருப்பீர்கள்.
4. மூச்சுப் பயிற்சியுடன் சிறிது நேரம் தியானம் இருப்பதும் நல்லது. நாளை நிதானமாக தொடங்குவதற்கு தியானம் நல்ல தொடக்கமாக அமையும். மன அழுத்தம், மன கவலை உள்ளிட்டவை இதன் மூலம் குறையலாம். உங்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். எனவே காலையில் தியானம் செய்வதையும் வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
5. உடற்பயிற்சி மேற்கொள்வதும் அதிகாலையில் நல்லது. உடற்பயிற்சி என்றால் உடல்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமின்றி ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி என நீங்களாகவே சில விஷயங்களை செய்யலாம். இதுவும் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லதாகும்.
6. அதேபோல் அதிகாலையில் செய்தித் தாள் படிப்பது, இணையப் பக்கங்கள் செய்திகளை படித்து ஆராய்வது ஆகிய செயல்களை செய்வதும் அவசியம். இது உங்களை இந்த உலகத்தோடு இன்னும் நெருக்கமாக்கும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். இதுவும் மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
7. நீங்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தால் காலையில் பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு மன அமைதியை தரும். வீட்டின் அருகிலேயே கோயிலோ, மசூதியோ அல்லது உங்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் காலையிலேயே அங்கு சென்று உங்களின் பிரார்த்தனைகளை மேற்கொண்டால் உங்களின் அன்றைய தினம் சிறப்பாக அமையக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் வல்லுநர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | ஆயிரக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை... வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ