ஆதார் அப்டேட் : செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..!

Aadhaar Update Free Online : ஆதார் அப்டேட் குறித்து இப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்துவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

Last Updated : Aug 28, 2024, 08:21 AM IST
  • ஆதார் கார்டு அப்டேட் புதிய வழிமுறை
  • கட்டணமில்லாமல் செய்ய செப்டம்பர் 14 கடைசி தேதி
  • ரூ.50 அல்லது 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்
ஆதார் அப்டேட் :  செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..! title=

Aadhaar Update Free Online News : இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாக மாறியிருக்கும் ஆதார் அட்டை குறித்து புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. புதிதாக அப்டேட் செய்ய இருப்பவர்கள் இங்கிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் கட்டணம் கிடையாது. மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு முக்கியமான ஆவணமாக மாறியிருக்கும் ஆதார் அட்டையை தபால் நிலையம், வங்கிகள், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டை இருந்தாலே உங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக KYC சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். எனவே ஆதாரில் உள்ள உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.

மேலும், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிகள் 2016ன் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். அதன்படி, ஆதார் அட்டைகளை புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்துகிறது. ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 ஆம் தேதியாகும். இந்த தேதிக்குள் MyAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் அட்டைக்கான உங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணத்தை கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! கோரிக்கையை ஏற்ற அரசு! பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும்?

ஆதார் புதுப்பிக்க கட்டணம்

ஆதார் அட்டையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் அப்டேட் செய்யாதவர்கள், அந்த தேதிக்குப் பிறகு My Aadhar போர்ட்டலில் ரூ. 25 அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஆதார் அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் : 

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் அட்டை, பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், ரேஷன் கார்டு, 

முகவரி சான்றுக்கு தேவையான ஆவணங்கள் : 

வங்கி பாஸ்புக், மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு கட்டணம், பாஸ்போர்ட், திருமண சான்றிதழ், ரேஷன் கார்டு, சொத்து வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது.

ஆதார் அப்டேட் செய்வது எப்படி?

- முதலில் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
-பின்னர் Enter ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Sent OTP' ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைத்ததும், அதை உள்ளிட்டு Enter ஆப்சனை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு Document Update விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- வழிமுறைகளைப் படித்த பிறகு அடுத்த ஆப்சனை கிளிக் செய்யவும்.
-உங்கள் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'I confirm that the above details are correct' என்ற பாக்ஸை கிளிக் செய்து, அடுத்த ஆப்சனை கிளிக் செய்யவும்.
- அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுக்கான ஆவணங்களைப் பதிவேற்றி, சமர்ப்பி விருப்பத்தைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் அட்டை ஏழு நாட்களுக்குள் இலவசமாக அப்டேட் ஆகும்.

மேலும் படிக்க | உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News