உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?

PAN Card Misuse: இன்றைய உலகில் டிஜிட்டல் திருட்டு அதிகமாகிவிட்டது. உங்கள் பான் எண்ணை தவறான வழிகளில் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2024, 11:29 AM IST
  • பான் கார்டு மூலம் நடைபெறும் மோசடி.
  • அடிக்கடி வங்கி பரிவர்த்தனையை சரிபார்ப்பது அவசியம்.
  • இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும்.
உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி? title=

PAN Card Misuse: பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (PAN) வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ஆகும். இது பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு முக்கியமான ஒரு ஆவணமாகும். நீங்கள் நிறைய இடங்களில் உங்களது பான் எண்ணை பயன்படுத்தி வரலாம். இதன் காரணமாக அவை தவறான இடங்களிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்படி நடக்காது என்றும் நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. கிரெடிட் கார்டுகளில் கடன் பெற, ஆன்லைன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க மற்றவர்களின் பான் கார்டு தகவலைப் பயன்படுத்தி ஏமாற்றி வருவதற்காக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. உங்களுக்கும் உங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால் சில வழிகளில் அதனை கண்டுபிடிக்கலாம். சில உடனடி நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். முதலில் உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 

மேலும் படிக்க | PPF: தினமும் வெறும் ரூ.405 சேமித்து எளிதில் கோடீஸ்வரராவது எப்படி?

உங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா?

உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் கிரெடிட் கார்டு பில்கள் போன்றவற்றை அடிக்கடி சரிபார்ப்பது நல்லது. இதுதவிர உங்களின் நிதி பரிவர்த்தனை சம்பத்தப்பட்ட அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் பரிவர்த்தனை நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களின் கடன் விவரங்களை சரிபார்த்து கொள்வது நல்லது. CIBIL அல்லது வேறு ஏதேனும் கிரெடிட் பீரோவிடமிருந்து உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு தெரியாத, அதே சமயம் சந்தேகத்திற்கிடமான அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை நீங்கள் கண்டால் உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமான வரி கணக்கை சரிபார்க்கவும். இதைச் செய்ய, பான் கார்டு விவரங்களை கொண்டு வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் உள்ளதா என உங்கள் வரித் தாக்கல்களைச் சரிபார்க்கவும். உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயரில் ஏதேனும் நிதிப் பரிவர்த்தனை நடைபெறுகிறதா என்பதைப் சரி பார்க்க, படிவம் 26ASன் விவரங்கள் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் பான் எண் தவறாக பயன்படுத்தப்பட்டால்?

உங்கள் வங்கி அறிக்கைகள், வங்கி கணக்குகள் அல்லது வருமான வரி விவரங்களைச் சரிபார்க்கும்போது உங்கள் பான் கார்டு மூலம் ஏதேனும் மோசடி நடைபெற்றுள்ளது என்பதை நீங்கள் கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு தெரிவிக்கவும். இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண முடியும். உங்கள் பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால் உடனே காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் இதனை சட்டபூர்வமாக அணுகவும் உதவிகரமாக இருக்கும். இது மட்டுமின்றி உங்கள் பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் வருமான வரித் துறையைத் தொடர்புகொண்டு புகாரளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜிம்மில் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News