பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை ஐந்து தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத விவசாயிகள் சுமார் 70 லட்சம் வரை நாட்டில் இருக்கலாம் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நிதி பெற விவசாயிகள் விண்ணப்பித்திருந்த போதிலும், அவர்கள் செய்த ஒரு சில தவறுகளால் அவர்களுக்கு இந்த நிதி சென்றடையாமல் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது: tnGovt...
அப்படி என்ன தவறு?
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற நீங்கள் பதிவுசெய்திருந்தாலும், இந்த திட்டத்தின் பலனை இதுவரை பெறவில்லை என்றால், உங்கள் ஆவணத்தில் தவறு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை தவறாக பதிவு செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.
உண்மையில், இதுபோன்ற பல தவறுகளால் உங்கள் படிவம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். ஆவணங்களில் கண்டறியப்பட்ட சிறு தவறு காரணமாக சுமார் 70 லட்சம் விவசாயிகளின் கணக்கில் பிரதமர் கிசான் சம்மன் நிதி இதுவரை வரவு வைக்கப்படவில்லை என அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விடுபட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் தவறுகளை சரிசெய்து மீண்டும் விண்ணப்பித்து பலனை பெற அரசு அனுமதித்துள்ளது.
தவறு எங்கே நடந்தது?
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட பல ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், வங்கியில் பல விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களில் அவர்களது பெயர், ஊர் பெயர் போன்ற விவரங்களில் மாறுபாடு இருந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய விவசாயிகளின் பெயர் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இணைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தகவல்கள் படி இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 14.5 கோடி விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. ஆனால் இதுவரை 9.68 கோடி விவசாயிகள் மட்டுமே இதன் பலனை அடைந்துள்ளனர்.
தவறை எவ்வாறு சரிசெய்வது?
- முதலில், நீங்கள் பிரதமர் கிசான் திட்டத்தின் வலைத்தளத்தைப் (https://pmkisan.gov.in/) பார்வையிட வேண்டும்.
- இதற்குப் பிறகு, மூலையில் உள்ள Edit Aadhaar Details என்னும் விருபத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது உங்கள் ஆதார் எண்ணை அங்கே சமர்ப்பிக்க வேண்டும்.
- இப்போது உங்கள் பெயர் தவறாக இருந்தால் ஒரு எச்சரிக்கை செய்தி எழும். அவ்வாறு எழுந்தால் தவறான விவரங்களை சரிசெய்து பின்னர் மீண்டும் சமர்பிக்க வேண்டும்.
- அதாவது, பெயரில் வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் உங்கள் கணக்காளர் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
- ஆவணங்களை சரி செய்த பின்னர் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
ஒருவேளை நீங்கள் இதற்கு முன் விண்ணப்பித்திருந்தால், உங்கள் ஆதார் சரியாக பதிவேற்றப்படவில்லை அல்லது சில காரணங்களால் ஆதார் எண் தவறாக உள்ளிடப்பட்டிருந்தால், அந்த தகவலையும் நீங்கள் இங்கே பார்க்கலாம். பிறகு, உங்கள் தவறையும் நீங்கள் சரிசெய்யலாம். இந்தத் திட்டத்தின் பலன் வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்களையும் மாநில / மாவட்ட வாரியாக / தாலுக்கா / கிராமத்தின் படி காணலாம். அனைத்து பயனாளிகளின் முழு பட்டியல் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயன்பாட்டின் நிலை என்ன என்பதையும் விவசாயிகள் ஆதார் எண் / வங்கி கணக்கு / மொபைல் எண் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.