இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது!
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாகவும் 2030-ம் ஆண்டில், தண்ணீர் தேவையானது, இருப்பை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள் என்றும் இன்றைய நிலை தொடர்ந்தால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 60 கோடி பேர், தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் 70% நீர்நிலைகள் அசுத்தன்மானதாக மாருவருவதாகவும், தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடிகளில் இந்தியா 120 -வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழக நிலத்தடி நீரை கண்காணிக்க 526 கண்காணிப்பு கிணறுகள் தேர்ந்தேடுக்கபடுள்ளதாகவும், முந்தைய நிலத்தடி நீர்மட்ட அளவுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது 87% கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும், 13% கிணறுகளில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் முந்தைய சராசரி அளவை விட உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டில் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனவும் நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது!