வெளியானது 96 படத்தின் First Look போஸ்டர் - புகைப்படம் உள்ளே

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் ‘ 96 ‘ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது

Updated: Jul 12, 2018, 11:29 AM IST
வெளியானது 96 படத்தின் First Look போஸ்டர் - புகைப்படம் உள்ளே

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் ‘ 96 ‘ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் First Look போஸ்டர் மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.