கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஹார்ஸ்ஷூ நண்டு ரத்தம் உதவியாக இருக்கும் என தகவல்..!
COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் வல்லுநர்கள் அனைவரும் மும்முரமாக உள்ளனர். ஆனால், இதுவரை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஹார்ஸ்ஷூ நண்டு (Horseshoe Crab) ரத்தம் உதவியாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக நண்டு மிகவும் சுவையான கடல் உணவாகவே மக்கள் மத்தியில் கருதப்படுகிறது. அதன் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என்று அனைவரும் கூறுவது வழக்கம். ஆனால், உங்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு சிறப்பு வகை நண்டு பிரபலமாக உள்ளது. இப்போது இந்த நண்டு கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். இந்த குறிப்பிட்ட நண்டிலிருந்து தடுப்பூசி தயாரிக்க வல்லுநர்கள் தற்போது முயற்சிக்கின்றனர்.
READ | காற்றின் மூலம் பரவும் கொரோனா... தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி..
கொரோனா வைரஸ் தடுப்பூசி கடலில் காணப்படும் ஹார்ஸ்ஷூ நண்டிலிருந்து (Horseshoe Crab) தயாரிக்கப்படலாம், இது கொரோனா சிகிச்சையில் உதவியாக இருக்கும். இந்த குறிப்பிட்ட கடல் உயிரினங்களின் நண்டு வெளிர் நீற இரத்தத்தைக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது பல நோய்களுக்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்த நண்டின் இரத்தம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.
ஒரு ஊடக அறிக்கையின்படி, ஹார்ஸ்ஷூ நண்டு பூமியில் கிட்டத்தட்ட 300 மில்லியன் ஆண்டுகளாக உள்ளது. இந்த நண்டின் வெளிர் நிற இரத்தம் உலகின் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும் என்று இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தடுப்பூசிக்குள்ளும் பாக்டீரியாக்கள் கிடைக்கக்கூடாது. ஏனென்றால், மனிதர்கள் இதிலிருந்து இறக்கலாம். ஹார்ஸ்ஷூ நண்டு நீல இரத்தத்தில் தடுப்பூசியில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் உள்ளது.