Aadhaar Card Photo Change: ஆதார் போட்டோ உங்களுக்கே பிடிக்கவில்லையா... இதை செய்து உடனடியாக மாற்றலாம்!

How To Update Aadhaar Card Photo: ஆதார் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2023, 10:14 AM IST
  • ஆதாரை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
  • ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற நிச்சயம் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படும்
Aadhaar Card Photo Change: ஆதார் போட்டோ உங்களுக்கே பிடிக்கவில்லையா... இதை செய்து உடனடியாக மாற்றலாம்! title=

How To Update Aadhaar Card Photo: ஆதார் அட்டை, இந்தியாவின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஆதார் அட்டை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன், நாட்டில் உள்ள பல அரசு திட்டங்களைப் பயன்படுத்தவும், சேவைகளை பெறவும் ஆதார் அட்டையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணுடன், அதை வைத்திருப்பவரின் புகைப்படம், அவரது முகவரியும் இடம்பெற்றிருக்கும். அதே நேரத்தில், ஆதார் அட்டையில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. 

அந்த வகையில், ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும் தங்கள் சொந்த புகைப்படத்தை பலரும் விரும்புவதில்லை என கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் கூட ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தின் மீது பல்வேறு கேலி பேச்சுக்கள் இருப்பதை நீங்களும் கேட்டிருக்கலாம்.

எனவே, பலரும் ஆதார் அட்டையில் உள்ள அவர்களின் புகைப்படத்தை மாற்ற விரும்புகிறார்கள் என தெரிகிறது. இந்நிலையில், ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படத்தையும் நீங்கள் எளிதாக மாற்றக் கூடிய வசதி உள்ளது. ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஆதார் அட்டையின் புகைப்படத்தை எளிதாக மாற்ற முடியும்.

மேலும் படிக்க | ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (uidai.gov.in) பார்வையிடவும் அல்லது இந்த இணைப்பை (https://uidai.gov.in/) கிளிக் செய்யவும். 
- இப்போது 'Aadhaar Update' விருப்பத்தை கிளிக் செய்யவும். 
- ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- அங்கு இருக்கும், ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.
- உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் உங்களை படம் எடுத்துக்கொள்வார்.
- இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
- ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார்.
- உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

ஆதார் அட்டை புகைப்பட புதுப்பிப்பு

இதற்குப் பிறகு, உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனிலும் கண்காணிக்கலாம். UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம். நீங்கள் வழங்கிய விவரங்கள் ஆதார் போர்ட்டலில் புதுப்பிக்கப்பட 90 நாட்கள் ஆகும். 

நீங்கள் கொடுத்த விவரங்கள் மற்றும் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதும், ஒரு புதிய நகலை பதிவிறக்கம் செய்து அதை அச்சிடவும் முடியும். இருப்பினும், ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிக்கும் முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு கண்டிப்பாக ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும் படிக்க | 8th Pay Commission மெகா அப்டேட்: விரைவில் வருகிறது 44% ஊதிய உயர்வு!!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News