வாய் துர்நாற்றத்தை ஒரே நாளில் சரி செய்வது எப்படி?

Oral health : வாய் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைள் வராமலேயே தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2024, 09:00 AM IST
  • வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி
  • வாய் வழி ஆரோக்கியத்தால் வரும் பிரச்சனைகள்
  • வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வாய் சுகாதாரம் அவசியம்
வாய் துர்நாற்றத்தை ஒரே நாளில் சரி செய்வது எப்படி? title=

Oral health Tips : பற்களை பளபளப்பாக வைப்பது மட்டுமே வாய் வழி ஆரோக்கியம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் வாய் வழி ஆரோக்கியம் என்பது பல காரணங்களுக்காக முக்கியமானது. மோசமான வாய் ஆரோக்கியத்தால் ஏற்படும் ஈறு பிரச்சனைகள், பற்குழிகள் மற்றும் நோய் தொற்றுகள் ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த வாய் வழி ஆரோக்கியம் என்பதை வாழ்க்கை முறையுடன் நேரடித் தொடர்பு உடையது. ஒரே இரவில் எல்லாம் வாய் வழி ஆரோக்கியத்தை பேண முடியாது. தினசரி பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே வாய் வழி ஆரோக்கியம் பேண முடியும். குழந்தை பருவம் முதல் முதியவர்களாகி இறக்கும் வரை வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். 

வாய் வழி ஆரோக்கியத்தால் தடுக்கப்படும் பிரச்சனைகள்

வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல் சிதைவுகள் உருவாகாது. ஈறு பிரச்சனைகள் போன்றவையும் உருவாகாது. இதுதவிர இளம் வயதிலேயே பல் இழப்பு ஆகியவையும் ஏற்படாது. குழந்தை பருவம் முதல் வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே முதிய வயதிலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் செரிமான பிரச்சனைகள் வராது. உணவுகளை நன்றாக மென்று சாப்பிட முடியும். வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் இரப்பை குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாய் சுகாதாரத்தை பராமரிக்கவில்லை என்றால் பாக்டீரியா தொற்றுகள், கர்ப்ப சிக்கல்கள், குறைந்த எடை, புற்றுநோய் மற்றும் செப்சிஸ் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

மேலும் படிக்க | உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?

வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

குழந்தைகளுக்கு உணவளித்த பிறகு பெற்றோர்கள் சுத்தமான துணியைக் கொண்டு அவர்களின் ஈறுகளை சுத்தம் செய்யலாம். பதின்பருவ குழந்தைகள் என்றால் தினமும் காலை மாலை என இருவேளைகள் பற்களை துலக்க அறிவுறுத்துங்கள். குழந்தைகளை இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது என கண்டிப்பதுடன் பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகம் சாப்பிடுவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். 

பெற்றோரும் இதே உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். 20 வயதைக் கடந்துவிட்டாலே பல் பரிசோதனைகளை செய்வது அவசியம். வயதானவர்களுக்கு கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை அவசியம். அவர்கள் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பற்கள் மற்றும் ஈறு சுகாதாரத்தை பேணுவது அவசியம். இந்த அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் எல்லோரின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | Samantha : காதலிக்கப்போறீங்களா? சமந்தா கொடுத்த ரிலேஷன்ஷிப் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News