Umang App மூலம் மிக எளிதாக இந்த வழியில் PF தொகையைப் பெறலாம்!!

உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், இப்போது பணத்தை எடுக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 06:09 PM IST
  • Umang App உதவியுடன் உங்கள் PF பணத்தை நீங்கள் எளிதாக எடுக்கலாம்.
  • நீங்கள் PF கணக்குடன் ஆதார் எண்ணை இந்த செயலி மூலம் இணைக்கலாம்.
  • பயனர்கள் தங்கள் EPF-ல் உள்ள பேலன்ஸ் தொகையை இந்த App-ன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Umang App மூலம் மிக எளிதாக இந்த வழியில் PF தொகையைப் பெறலாம்!!  title=

உங்கள் PF கணக்கிலிருந்து (PF Account) பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், இப்போது பணத்தை எடுக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இப்போது உமங் ஆப் (Umang App) உதவியுடன் உங்கள் பணத்தை நீங்கள் எளிதாக எடுக்கலாம். Umang App மூலம் உங்கள் பணத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பல வகையான வசதிகள் உள்ளன

Umang.gov.in போர்ட்டலின் படி, இந்த அரசாங்க செயலி, ஆதார், ஈபிஎஃப், என்.பி.எஸ், டிஜிலாக்கர் போன்ற பல்வேறு வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. தேவைப்பட்டால், நீங்கள் PF கணக்குடன் ஆதார் எண்ணை இந்த செயலி மூலம் இணைக்கலாம்.

ALSO READ: EPF கணக்கில் இந்த தவறை செய்யாதீர்கள்... மீறினால் ரூ.50,000 வரை இழக்க நேரிடும்!

Umang App மூலம் இந்த முறையில் பெணம் பெறலான்:

• முதலில் Google Play Store-இலிருந்து App-ஐ பதிவிறக்கம் செய்யவும்.

• இப்போது App-ஐ ஓப்பன் செய்யவும்.

• App-ல் லாக் இன் செய்யவும்.

• ‘EPFO’ ​​ஐத் தேர்ந்தெடுத்து 'பணியாளர் மைய சேவைகள்' (Employee Centric Services)-ஐத் தேர்ந்தெடுக்கவும்

• இதற்குப் பிறகு, 'உரிமைகோரலை உயர்த்து' (Raise Claim) ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்

• UAN தகவலை உள்ளிடவும்

• 'Get OTP'-ல் கிளிக் செய்யவும்.

• பின்னர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

• ‘Login’-ல் கிளிக் செய்யவும்

• அவ்வாறு செய்த பிறகு, இப்போது உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும்

• Member ID-ஐ தேர்ந்தெடுத்து, ‘Proceed for claim’-ல் கிளிக் செய்யவும்.

• இப்போது நீங்கள் 'முகவரி' உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்

• முகவரியை உள்ளிட்ட பிறகு, 'Next’-ல் கிளிக் செய்து, காசோலை புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யவும்.

• இப்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் பணம் உங்கள் கணக்கில் மாற்றப்படும்.

அரசு இந்த App-ஐ வெளியிட்டுள்ளது

இந்த பயன்பாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது. நீங்கள் iOS மற்றும் Android இரண்டிலிருந்தும் App-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் வலை பதிப்பும் கிடைக்கிறது. பயனர்கள் தங்கள் EPF-ல் உள்ள பேலன்ஸ் தொகையை இந்த App-ன் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

ALSO READ: குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வேண்டுமா? Top 10 வங்கிகளின் பட்டியல் இதோ!!

Trending News