39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியில் துவக்கம்..

39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் பிரகதி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

Updated: Nov 17, 2019, 02:29 PM IST
39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியில் துவக்கம்..

39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் பிரகதி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சி நவம்பர் 27 வரை நடைபெறுகிறது. ஆனால் பொது மக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் நவம்பர் 18 வரை மட்டுமே நுழைவு அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பொதுவாக, இந்த கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4000-5000-ஆக இருக்கும். ஆனால் இந்த முறை கட்டுமான பணிகள் காரணமாக இந்த கண்காட்சி முந்தைய ஆண்டுகளை விட சிறியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரகதி மைதானத்தில் நடைபெறும் வர்த்தக கண்காட்சிக்கு லட்சக் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கூட்ட நெரிசலின் சிக்கலைக் கருத்தில் கொண்டு, ஒரு நாளில் 25000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது போலவே, இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் கலை பற்றிய பார்வையைப் இங்கு மக்கள் பெறக்கூடும்.

கூடுதலாக, சணல் பைகள், மரவேலை கலைப்படைப்புகள், வீட்டு அலங்காரங்கள், மசாலா பொருட்கள், சமையலறை மேம்பாடுகள், ஒப்பனை பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், விளக்குகள், பயன்பாட்டு பொருட்கள் அல்லது உடற்பயிற்சி பொருட்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது மக்களும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.

குறிப்பாக சில பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு அன்பளிப்புகளும் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.