ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: ஐஆர்சிடிசி (IRCTC) அவ்வப்போது பல்வேறு டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் நீங்கள் ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி சாய் பாபாவை தரிசனம் செய்ய அங்கு செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜின் கீழ் நீங்கள் பயணம் செய்யலாம். இன்று நாங்கள் உங்களுக்கு பாரத் கௌரவ் ரயில் ஷீரடி மற்றும் ஜோதிர்லிங் டூர் பேக்கேஜ் பற்றி கூற உள்ளோம். இந்த பேக்கேஜின் கட்டணம் மற்றும் பிற விவரங்களை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
இந்த டூர் பேக்கேஜ் எங்கிருந்து தொடங்கும்:
இந்த பேக்கேஜ் பீகாரில் உள்ள கதிஹார் நிலையத்திலிருந்து தொடங்கும், இங்கிருந்து நீங்கள் 'பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலை' பிடிக்க வேண்டும்.
8 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் சாய்பாபாவின் தரிசனம்:
இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் 8 ஜோதிர்லிங்கங்களான மகாகாலேஸ்வரர் கோயில் - உஜ்ஜைன், சோமநாதர் கோயில், ஓங்காரேஸ்வரர் கோயில், துவாரகாதீசர் கோயில், நாகேஸ்வரர் கோயில் - துவாரகை, திரிம்பகேஸ்வரர் கோயில் - நாசிக், கிரிஸ்னேஸ்வரர் கோயில் - ஔரங்கபாத், பீமாசங்கர் கோயில், காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாம். இது தவிர, ஷீரடியில் இருக்கும் சாய்பாபாவை தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
டூர் பேக்கேஜ் மொத்தம் எத்தனை நாட்கள் நீடிக்கும்:
இந்த டூர் பேக்கேஜின் மொத்தம் 13 பகல் மற்றும் 12 இரவுகள் ஆகும். இந்த பேக்கேஜில், உங்களுக்கான ஹோட்டல் மற்றும் உணவு ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்ளலாம் என்ற விருப்பமும் உள்ளது.
பயணம் எப்போது தொடங்கும்:
இந்த சுற்றுப்பயணம் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி வரை தொடரும். இந்த பேக்கேஜ் எகானமி மற்றும் ஸ்டாண்டர்ட் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு விவரம்:
இந்த பேக்கேஜில் நீங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு மற்றும் இரவு முழுவதும் ஏசி அல்லது ஏசி அல்லாத அறையில் தங்கலாம். மேலும் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிட்டு அங்கு புக் செய்துக் கொள்ளலாம்.
Want to obtain inner peace?
Join the Bharat Gaurav Shirdi & 8 Jyotirlinga Yatra, Ex Katihar (EZBG13) starting on 25.11.2023.Book now on https://t.co/6BzacjRlEz#BharatGaurav #Travel #DekhoApnaDesh pic.twitter.com/7ikQmSzvsb
— IRCTC Bharat Gaurav Tourist Train (@IR_BharatGaurav) September 27, 2023
இந்த டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
டூர் பேக்கேஜின் வகைக்கு ஏற்ப கட்டணம் வேறுபட்டது.
எகானமி கோச்- இந்த பேக்கேஜில் எகானமி கோச்சில் பயணிக்க, ஒரு நபருக்கு ரூ.21,251 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஸ்டாண்டர்ட் கோச்- நிலையான கோச்சில் பயணிக்க, ஒரு நபருக்கு ரூ.33,251 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் இந்த டூர் பேக்கேஜில் பயணம் செய்ய விரும்பும் நபர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது அருகிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்... கட்டணமில்லா எண்களை அழைப்பதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | 1 கோடி அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. அகவிலைப்படி குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ