Indian Railways-ன் புதிய ‘Bike on Rent’ வசதி: இனி station-ல் இறங்கி bike-ல் இலக்கை அடையலாம்

இந்தியன் ரயில்வே Bike on Rent வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்காத வருவாய் ஆலோசனைகள் திட்டத்தின் (NINFRIS) கொள்கையின் கீழ் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2021, 07:31 PM IST
  • இந்தியன் ரயில்வே Bike on Rent வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது முதலில் சில ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
  • ரயில்களில் காத்திருப்பு பட்டியலை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் ரயில்வே ஆலோசனை.
Indian Railways-ன் புதிய ‘Bike on Rent’ வசதி: இனி station-ல் இறங்கி bike-ல் இலக்கை அடையலாம் title=

நாம் ஒரு ஊருக்கு சென்றாலோ, அல்லது சுற்றுலா சென்றாலோ, ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, ஒரு டாக்சியைத் தெடி போவது வழக்கம். அருகில் உள்ள பகுதிகளுக்கும் நாம் டாக்சி அல்லது ஆட்டோக்களின் உதவியைத் தான் நாட வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் அது மாறக்கூடும். ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இனி செல்ல முடியும்.

இந்தியன் ரயில்வே சார்பாக, இந்த சிறப்பு வசதி தற்போது ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி பல ரயில் நிலையங்களில் வரவிருக்கும் நாட்களில் விரிவுபடுத்தப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

‘Bike on Rent' வசதியை துவக்கியது இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே (Indian Railway) Bike on Rent வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்காத வருவாய் ஆலோசனைகள் திட்டத்தின் (NINFRIS) கொள்கையின் கீழ் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, ​​ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் "Bike on Rent" வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டேஷனுக்கு வெளியே கட்டப்பட்ட கியோஸ்க்குச் சென்று அங்கு நீங்கள் ஒரு பைக்கை வாடகைக்கு எடுக்க முடியும்.

ALSO READ: வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!

சுற்றுலாப் பயணிகள் இந்த சேவையை விரும்புகிறார்கள்

பல சுற்றுலாப் பயணிகள் மலைப்பிரதேசங்களிலும் பிற இடங்களிலும் பைக்கை வாடகைக்கு எடுத்து செல்ல விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதை மனதில் வைத்து இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் தாஜ்மஹால் (Taj Mahal) உட்பட பல இடங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ரயில்வேயின் இந்த வசதி நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணங்கள் இந்த வகையில் இருக்கும்

ரயில் நிலையத்தில் (Railway Station) இறங்கிய பிறகு ஸ்கூட்டியை வாடகைக்கு எடுத்தால், நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாயும், 3 மணி நேரத்திற்கு 150 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 600 ரூபாயும் செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்தால், ஒரு மணி நேரத்திற்கு 70 ரூபாயும், 3 மணி நேரத்திற்கு 210 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 840 ரூபாயும் செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு புல்லட்டை வாடகைக்கு எடுத்தால், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாயும், 3 மணி நேரத்திற்கு 300 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 1200 ரூபாயும் செலுத்த வேண்டும்.

Waiting list டிக்கெட் குறித்த தகவல்

காத்திருப்பு டிக்கெட்டுகளின் (Waiting List) விதி குறித்து ரயில்வே இந்த தகவலை வழங்கியது. கொரோனா தொற்றுநோயை மனதில் கொண்டு, தற்போது ரயில்வே ரயில்களில் காத்திருப்பு டிக்கெட் முறையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இல்லையென்றால், நீங்கள் ரயிலில் பயணிக்க முடியாது.

அதே நேரத்தில், ரயில்களில் காத்திருப்பு பட்டியலை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் ரயில்வே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ரயில்வே பயணிகளுக்கு காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் குறித்து பெரிய தகவல்களை அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த அமைப்பு மூலம் டிக்கெட் பெறுவது எளிதாக இருக்கும்.

இந்த தகவலை வழங்கியது ரயில்வே

பல ஊடக அறிக்கைகள் 2024 முதல் காத்திருப்பு பட்டியல் இருக்காது அல்லது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் 2024 வரை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதாக ரயில்வே கூறியது. இது முற்றிலும் சரியான தகவல் அல்ல என்பதையும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. ரயில்களின் தேவைக்கேற்ப இருக்கைகளை வழங்குவதற்காக ரயில்களின் திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியது. இது காத்திருப்பு பட்டியலில் பயணிகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

ALSO READ: அறிமுகமாகும் IRCTCயின் புதிய வலைதளத்தின் நவீன அம்சங்கள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News