இந்த நாளில் ரயில்வே சேவைகள் நிறுத்தப்படும்.. உங்கள் டிக்கெட் குறித்து விவரம் அறியமுடியாது

இந்த தேதியில் ரயில் டிக்கெட்டு குறித்த விவரங்களை அறிய முடியாது. எனவே சில மணிநேரங்கள் சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2020, 11:05 AM IST
இந்த நாளில் ரயில்வே சேவைகள் நிறுத்தப்படும்.. உங்கள் டிக்கெட் குறித்து விவரம் அறியமுடியாது title=

Indian Railways: இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு (IRCTC Train Tickets Reservation) மற்றும் 139 சேவை (Train Enquiry) உள்ளிட்ட பிற சேவைகள் ஜூன் 13 இரவு முதல் சில மணி நேரம் மூடப்படும். ஜூன் 13/14 நள்ளிரவில் பி.ஆர்.டி (PRD) விசாரணை சேவை தற்காலிகமாக 3 மணி நேரம் 30 நிமிடங்கள் மூடப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் பி.என்.ஆர் (PNR) சேவையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்தார். இதன் காரணமாக டெல்லி பி.ஆர்.எஸ் (PRS) இன் அனைத்து சேவைகளும் முன்பதிவு (Reservation), டிக்கெட் ரத்து (Cancellation), டிக்கெட் அட்டவணை (Charting), கவுண்டர்கள் (Ticket Counters) மற்றும் பி.ஆர்.எஸ் சேவை எண்கள் 139 (Railway Customer Care Number) செயல்படாது. இணைய முன்பதிவு குறித்து விவரம் மற்றும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான சேவைகள் நிறுத்தப்படும் என்றார்.

பிற செய்தி படிக்கவும் | உலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் இந்தியாவில் அமையவுள்ளது; எந்த நகரத்தில் தெரியுமா?

இந்த சேவை தற்காலிகமாக 13 ஜூன் 2020 இரவு 11.45 மணி முதல் 14.06.2020 அன்று காலை 03.15 வரை மூடப்படும். இயக்க முறைமை இணைப்பு நிறுவுதல் மற்றும் கணினி சரிப்படுத்தும் செயல்பாடு காரணமாக, டெல்லி (Delhi Railway) பி.ஆர்.எஸ். அனைத்து சேவைகளும் இயங்காது.

இந்திய ரயில்வே (Indian Railways) ஜூன் 1 முதல் தினமும் 200 ரயில்களை இயக்குகிறது. இந்த வழக்கமான ரயில்கள் அவற்றின் நேர அட்டவணைக்கு ஏற்ப இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பு, ரயில்வே பயணிகளுக்கு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது. பயணத்தின் போது இந்த வழிகாட்டலை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.

பிற செய்தி படிக்கவும் | ஓடும் ரயிலில் குழந்தை பெற்ற இளம் பெண்; மே மாதத்தில் மட்டும் 37 வது டெலிவரி

சமீபத்தில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் ஒரு சில ரயில்களைத் தவிர, பெரும்பாலான ரயில்களில் இருக்கைகள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கிறது எனக்கூறினார். மேலும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டால், அந்த வழிப்பாதையில் மேலும் ரயில்கள் இயக்கப்படும். ஆன்லைன் டிக்கெட் (Railway ticket online) முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சியின் (IRCTC) வலைத்தளம் www.irctc.co.in மற்றும் மொபைல் பயன்பாடு மற்றும் டிக்கெட்டுகளை கவுண்டர் மூலம் எடுக்கலாம்.

ரயில்வே நிர்வாகம் செய்த ஏற்பாடுகள் என்ன? 
> அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு ஸ்டேஷனுக்குள் நுழைய மற்றும் வெளியேற தனி வாயில்கள் இருக்கும்.
> முகமூடி அணிந்து சமூக தூரத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.
> உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

பிற செய்தி படிக்கவும் | தொழிலாளர்களை ஏற்றிசென்று உ.பி.க்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற ஷ்ராமிக் ரயில்

உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா?
> எந்தவொரு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
> பயணிகள் முன்பணம் செலுத்திய உணவை ஆர்டர் செய்ய முடியாது. இ-கேட்டரிங் வசதியும் இருக்காது.
> ஐ.ஆர்.சி.டி.சி சில ரயில்களில் மட்டுமே உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை வழங்கும். உணவு மற்றும் குடிநீர் சீல் வைக்கப்பட்டு இருக்கும்.
> பயணிகளுக்கு தங்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்ல அறிவுறுத்துகிறது.

Trending News