மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன!!
புனேவில் MPA படித்துவரும் 23 வயதுடைய சுபி ஜெயின் (Subhi Jain) என்ற மாணவி 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார். அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட முயன்றார். அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார். தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், சீட்பெல்ட் போட வேண்டும் என்பதையும் தனது நடன அசைவு மூலம் சுபி ஜெயின் வலியுறுத்துவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
#WATCH Madhya Pradesh: An MBA student Shubi Jain volunteering to manage traffic on roads in Indore in her unique way, to spread awareness about traffic norms & regulations. pic.twitter.com/hBZd0bt3C5
— ANI (@ANI) November 18, 2019
தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமான இன்டர்ன்ஷிப் எனப்படும் பகுதி நேர நிகழ்ச்சியில் 15 நாட்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பினார். இதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி தனது விருப்பத்தை வேண்டுகோளாக கூறினார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆணையர் சுபி ஜெயினுக்கு டிராபிக் போலீஸ் உடை வழங்கி 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளித்தார்.
மேலும், சாலை விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு அவர் தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தனது இந்த முயற்சிக்கு இந்தூர் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சுபி ஜெயின் தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.