சர்வதேச மகளிர் தினம்: பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா!

மகளிர் தினத்தில் பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம்!

Updated: Mar 8, 2018, 09:24 AM IST
சர்வதேச மகளிர் தினம்: பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா!
ZeeNewsTamil

உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இருந்து அந்தமானுக்கு பெண் விமானிகளை கொண்டு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம் முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்டது. பல்துறையிலும் சாதனை படைத்து வரும் மகளிரை கவுரவிக்கும் வகையில், மகளிர் தினத்தில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு பெண் விமானிகளை கொண்டு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. 

இதில், சுமார் 182 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானத்தை பெண் விமானிகள் தீபாவும், சக விமானி ஷஸ்டியாவும் இயக்கினர். மகளிர் தினத்தை ஒட்டி ஏர் இந்தியாநிறுவனம் சார்பில்,12ஆவது ஆண்டாக பெண் விமானிகளை கொண்டு தனியாக விமானம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.