IRCTC-யில் இனி பேருந்துக்கும் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்: மார்ச் முதல் ஆரம்பம்

IRCTC வலைத்தளத்திலிருந்து இனி ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம். ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2021, 04:08 PM IST
  • IRCTC வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் இனி பேருந்தும் முன்பதிவு செய்யலாம்.
  • IRCTC மொபைல் செயலியிலும் இந்த சேவையைப் பெறலாம்.
  • மார்ச் முதல் வாரத்தில் IRCTC இதற்கான ஒருங்கிணைப்பை நிறைவுசெய்யும்.
IRCTC-யில் இனி பேருந்துக்கும் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்: மார்ச் முதல் ஆரம்பம் title=

IRCTC Online Bus Booking: இதுவரை நீங்கள் இந்திய ரயில்வேயின் பிரிவான IRCTC-யில் இருந்து ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறீர்கள். ஆனால் இப்போது இந்த வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம்.  

IRCTC (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன்) இந்த வசதியை ஜனவரி 29 முதல் தொடங்கியுள்ளது. ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் முதல் One Stop Shop Travel Portal

ரயில்வே அமைச்சகம், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் தலைமையில் IRCTC படிப்படியாக நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ 'One stop shop Travel Portal’ அதாவது ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் பயணத் தளமாக மெதுவாக முன்னேறி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு இனிமையான பயண அனுபவத்தை வழங்குவதற்காக ஆன்லைன் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணியில் IRCTC ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. இப்போது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையையும் தொடங்கியுள்ளது.

ALSO READ: மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!

மார்ச் முதல் மொபைலில் முன்பதிவு செய்யலாம்

IRCTC மொபைல் செயலியில் இந்த சேவையின் ஒருங்கிணைப்பை மார்ச் முதல் வாரத்தில் IRCTC நிறைவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் போன்கள் மூலம் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை வழங்க IRCTC ஏற்கனவே 50,000 க்கும் மேற்பட்ட மாநில சாலை போக்குவரத்து மற்றும் 22 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தனியார் பஸ் ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாடிக்கையாளருக்கு பல வசதிகள் கிடைக்கும்

IRCTC-யின் ஆன்லைன் (Online Booking) பஸ் முன்பதிவின் புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான பேருந்துகள் மற்றும் பாதைகளுக்கு பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி கிடைக்கும். சேவை மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பஸ்ஸை தேர்வு செய்யலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்களது பிக்-அப் மற்றும் டிராப் புள்ளிகள் மற்றும் நேரங்களைத் தேர்வு செய்ய முடியும். வங்கி மற்றும் இ-வாலட் தள்ளுபடி கிடைப்பதுடன் இதன் மூலம் நியாயமான விலையில் முன்பதிவு செய்ய முடியும்.

ALSO READ: IRCTC News: டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த புதிய விதியை மனதில் கொள்ளுங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News