ரயில் டிக்கெட்டில் 10% தள்ளுபடி வேண்டுமா..? ‘இதை’ செய்யுங்கள் போதும்..!

ரயிலில் அதிகம் பயணம் செய்பவரா நீங்கள்? ‘இந்த’ முறையை பயன்படுத்தினால் 10% தள்ளுபடி கிடைக்கும். 

Written by - Yuvashree | Last Updated : Sep 29, 2023, 12:19 AM IST
  • ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா?
  • ரயில் முன்பதிவு டிக்கெட்டில் தள்ளுபடி வேண்டுமா?
  • இந்த முறையை பின்பற்றினால் போதும்!
ரயில் டிக்கெட்டில் 10% தள்ளுபடி வேண்டுமா..? ‘இதை’ செய்யுங்கள் போதும்..!  title=

ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்த பதிவு. ரயில் டிக்கெட்டில் 10% தள்ளுபடி பெறுவது எப்படி? இங்கே பார்ப்போம். 

ரயிலில் பயணிகளை அதிகரிக்கும் வகையிலும் ரயிலில் அடிக்கடி பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு அசத்தலான சலுகையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்திய ரயில்வேயின் இந்த திட்டம் பலருக்கும் பயண செலவுகளை கட்டுப்படுத்த உதவும். 

என்ன செய்ய வேண்டும்?

ரயில் டிக்கெட்டுகளில் 10% தள்ளுபடி பெற உங்களிடம் கிரெடிட் கார்ட் இருந்தால் போதும். இந்த கார்ட் இருந்தால், ஒவ்வொரு டிக்கெட் புக்கிங்கிலும் நீங்கள் சிறந்த தள்ளுபடிகளை பெறலாம். 

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, (எஸ்.பி.ஐ) ரயிலில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்காக ஒரு கடன் அட்டையை (கிரெடிட் கார்டை) உருவாக்கியுள்ளது. இந்த கார்டு, IRTC Rupay SBI கார்ட், என்ர பெயரில் கிடைக்கப்பெறும். இந்த கார்டானது, ஐஆர்டிசியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பலன்கள்:

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டின் பலன்கள், பல உள்ளன. இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் முதல் பரிவர்த்தனையால் 350 ஆக்டிவேஷன் புள்ளிகள் முதலில் கிடைக்கும். இதையடுத்து, இந்த கார்டினை பயன்படுத்தி ஐஆர்டிசியில் ரயில் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், 10 சதவிகிதம் வேல்யூ பேக் கிடைக்கும். இது, நீங்கள் எடுக்கும் டிக்கெட்டில் 10 சதவிகித கேஷ்பேக்கிற்கு சமமாகும். 

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு முதல் ஏசி, இரண்டாம் நிலை ஏசி, மூன்றாம் ஏசி, நாற்காலி கார் ஆகிய சீட்டில் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் மதிப்பு தொகை வழங்கப்படும். இது அல்லாமல், ஐஆர்டிசியில் 1 சதவீத பரிவர்த்தனை கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  மேற்கூறிய கிரெடிட் பாய்ண்டுகளை வைத்து பயணிகள் பல நன்மைகளை பெறலாம். 

மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

ஐஆர்டிசி ரூபே எஸ்பிஐ கிரெடிட் கார்டில் ரயில் டிக்கெட் முன்பதிவுகள் மட்டுமல்லாது, பல நன்மைகளும் இருக்கின்றன. நீங்கள் எரிபொருள் வாங்கும் போது இந்த கார்டினை பயன்படுத்தினால் 1 சதவிகிதம் கூடுதலாக தள்ளுபடி கிடைக்கும். சிறிதாக சேமித்தாலும் சில நாட்களில் இந்த சேமிப்பானது பெரிதாகிவிடும். 

ரயில் டிக்கெட் முன்பதிவு, எரிபொருள் வாங்குவது மட்டுமன்றி, மேற்கூறிய ஐஆர்டிசி கார்டினை பயன்படுத்தி பிற பரிவர்த்தனைகளையும் நாம் மேற்கொள்ள முடியும். ஷாப்பிங்கும் செய்ய முடியும். ரூ.125க்கும் மேள் அல்லது அந்த தொகையில் வாங்கும் ஒவ்வொரு பர்சேசுக்கும் நமக்கு ஒரு மதிப்பிடுதல் (ரிவார்ட்) பாய்ண்ட் கிடைக்கும். 

இந்த கார்டில் ஆண்டுக்கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை புதுப்பிக்க 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க பட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டினை பெறுவதற்கு நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருப்பது அவசியம். மேலும், நல்ல சிபில் ஸ்கோர் உள்ளவர்கள் மட்டுமே இந்த கிரெடிட் கார்டினை பெற முடியும். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஐடி ரிட்டர்ன்ஸ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை இந்த கார்டினை வாங்க சமர்ப்பிக்கலாம். 

மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் டூர் செல்ல செம சான்ஸ்.. IRCTC அசத்தல் பேக்கேஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News