பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம்

அண்மைக்காலமாக பாடி பில்டர்கள் எல்லாம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என மருத்துவர் சந்து விளக்கம் கொடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 14, 2024, 09:11 AM IST
  • பாடிபில்டர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்?
  • அசுரத்தனமான பாடிபில்டர் திடீர் உயிரிழப்பு
  • மருத்துவர் சொல்லும் முக்கிய விளக்க குறிப்புகள்
பாடி பில்டர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது ஏன்? மருத்துவர் சொல்லும் விளக்கம் title=

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் கொடூரமான பாடிபில்டர் என பெயரெடுத்த இலியா கோலெம்' யெஃபிம்ச்சிக் Illia (Golem' Yefimchyk) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரின் உயிரிழப்பு பாடி பில்டிங் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயது மட்டுமே ஆகும் இலியா கோலெம் யெஃபிம்ச்சிக் தொழில்முறை பாடி பில்டிங் நிகழ்வுகளில் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. இருப்பினும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடிப்பில் அவருடைய பாடி பில்டிங்கை பார்க்க உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல லட்சங்களைத் தாண்டும்.

இலியா கோலெம் 25 அங்குல பைசெப்ஸை வைத்திருந்தார் என்றால் அவர் உடலின் கட்டமைப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு கவனிக்க வேண்டியது அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது தான். கோவிட் தொற்றுக்குப் பிறகு நிறைய பாடிபில்டர்கள் தொடர்ச்சியாக மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. டிரெட்மில்லில் ஓடும்போது அப்படியே கீழே விழுந்து உயிரிழப்பதைக் கூட நீங்கள் வீடியோக்கள் மூலம் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. 

மேலும் படிக்க | திருமண உறவில் புரிதலை அதிகமாக்க... தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

இதுகுறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இருதயவியல் முதன்மை இயக்குநர் டாக்டர் மஞ்சிந்தர் சிங் சந்து பேசும்போது, "பளு தூக்குதல் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகள் இருதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதை சரியாகவும் அளவாகவும் செய்ய வேண்டும். உடலில் அதிக அழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியம். அதீத உடற்கட்டமைப்பு அல்லது பளு தூக்குதலில் ஈடுபடும் நபர்களுக்கு, இதய ஆரோக்கியத்தை கண்காணிப்பது மிக முக்கியம். செயல்திறனை மேம்படுத்த மருந்துகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பது முக்கியம். இது இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?

மாரடைப்பு இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படுகிறது. பொதுவாக கரோனரி தமனிகளில் பிளேக், அதாவது கொழுப்பு, கொலஸ்ட்ரால் தேங்குவதால் ஏற்படும் அடைப்பு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதய தசையின் அந்த பகுதியை அடைவதைத் தடுக்கிறது, இதனால் பாதிக்கப்பட்ட திசுக்கள் சேதமடைகின்றன அல்லது இறக்கின்றன. இதனால் மாரடைப்பு ஏற்டுகிறது. 

அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய ஆபத்து காரணிகள். வெளித்தோற்றத்துக்கு ஆரோக்கியமாக தெரியும் நபர்கள் கூட மாரடைப்பு ஆபத்தில் இருக்க முடியும். இல்லியா யெஃபிம்ச்சிக்கின் மறைவுக்கு இதுபோன்ற பல காரணிகள் இருக்கலாம் என்று மருத்துவர் சந்து கூறினார். 

உங்களை எப்படி பாதுகாப்பது?

முறையான வழிகாட்டுதலோடு உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும் முன் சுமார் 20 நிமிடங்கள் வார்ம்அப் பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு பின் உடலில் ஏற்படும் வலி மற்றும் மாற்றங்களை காணுங்கள். இடது பக்கத்தில் மார்பு வலி, தலைச்சுற்றல் அல்லது மூட்டுகளில் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சமூகவலைதள பிட்னஸ் டிப்ஸ்களை கண்மூடித்தனமாக நீங்கள் நம்ப வேண்டாம். நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற குறைந்த தாக்க உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News