ஏழ்மையினை கேலி, கிண்டல் செய்யும் வகையில் வரும் எந்தவொரு நாகரீக அடையாளமும் ஊனத்தின் வெளிபாடு தான்!
சாமானியர்கள் இத்தகைய செயல்களை செய்தால் பரீசிளிக்கலாம், ஆனால் பிரபல நிறுவனங்கள் இவ்வாறு செய்தால் பொருத்துக்கொள்ள இயலுமா?.... இத்தாலியின் பிரபல நவநாகரீக பொருட்கள் விற்பனையாளர்களான கோல்டன் கூஸ் அதன் புதிய சூப்பர்ஸ்டார் டாப்ட் ஸ்னிக்கர் (Superstar Taped Sneaker)-களை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்னிக்கர்கள் கிழிந்த ஆடைகளால் தயாரிக்கப்பட்டது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்னிக்கர்களானது ஏழை எளிய மக்களின் வருமை நிலையினை பிரதிப்பளிப்பது போல் உள்ளது. இதனால் இந்த தயாரிப்பின் மீது கோவம் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் பலர் இந்த தயாரிப்புக்கு எதிராக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்னிக்கரின் விலையானது $530 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் ₹ 27874.72) ஆகும்.
இந்த தயாரிப்பு குறித்து ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளதாவது... ஏழை மக்கள் காலில் பிளாஸ்டிக் பேப்பர்களை சுற்றி காலாணி அனிந்திருப்பது அழகிற்காக அல்ல, அவர்களிடம் காலணியை வாங்க தேவையான பணம் இல்லை என்பதால்... அதனை கிண்டல் செய்யும் வகையில் இவ்வாறு ஒரு தயாரிப்பினை அறிமுகம் செய்வது வேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.