JIO ஜிகா ஃபைபர்: இலவச தரவு, தகுதி, சிறப்பு சலுகையின் முழு விவரம்!!

ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர் பற்றிய முழு விவரம்....

Last Updated : Feb 25, 2019, 03:54 PM IST
JIO ஜிகா ஃபைபர்: இலவச தரவு, தகுதி, சிறப்பு சலுகையின் முழு விவரம்!! title=

ஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடி ஆஃபர் பற்றிய முழு விவரம்....

கடந்த ஒரு வருடமாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் குறைவான விலையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Jio நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய தொலை தொடர்பு துறையில் ஒரு புரச்சியை ஜியோ ஏற்ப்படுத்தி உள்ளது எனக் கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல திட்டங்களை அறிவித்து வரும் ஜியோ, அதன் தொடர்ச்சியாக தற்போது புத்தாண்டிலும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் நம்பமுடியாத ஆஃபரை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வரிவலன்கியுள்ளது. ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை வெற்றி பெற்றதையடுத்து, அந்த வரிசையில், மக்களை கவர 'ஜியோ ஜிகா ஃபைபர்' என்ற அதிரடி ஆஃபரை கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம். ஜியோவின் இந்த ஜிகா ஃபைபர் சேவை (Jio GigaFiber) வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. 

இந்த சேவையை பெறுவதற்கு நாம் முன்பதிவு செய்வது அவசியம். ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதற்கு Myjio அல்லது jio.com ல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை சோதனை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து 1,100 நகரங்களில் சேவை வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜிகா ஃபைபர் சேவையின் சிறப்பு: 

இணைய சேவை 100 Mbps வேகத்தில் ரூ.699-க்கு ஒரு மாதத்திற்கு சுமார் 100 GB வழங்கப்படும். அதன்பின்னரும் தேவைக்கேற்ப 40 GB என்ற முறையில் டாப் அப் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 3 மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்பட இருப்பது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 100 GB இணைய சேவை முழுவதும் இலவசமாக வழங்கப்படும். 

இதற்கான WI-FI உபகரணத்தின் விலை ரூ.4200. இந்த தொகை திரும்ப பெறத்தக்கது (refundable security deposit) என்று ஜியோ நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை இன்ஸ்டால் செய்வதற்கென தொகை எதுவும் வசூலிக்கப்பார்த்து என்றும் நிறுவனம் தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. 

இதனை WI-FI உபகரணத்தை வீட்டில் செட் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல்/லேப்டாப்பில் கனெக்ட் செய்துகொள்ளலாம். இந்த ஜியோ  ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. 

 

Trending News