JOB ALERT: IDBI வங்கியில் வேலைவாய்ப்பு... தகுதியுடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

ஐடிபிஐ வங்கியின் எக்ஸிகியூட்டிவ் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான இறுதிநாள் இன்று: உடனே விண்ணப்பிக்கவும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 16, 2022, 12:26 PM IST
JOB ALERT: IDBI வங்கியில் வேலைவாய்ப்பு... தகுதியுடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் title=

புதுடெல்லி: ஐடிபிஐ வங்கி காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 

ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இன்றே விண்ணப்பிக்க கடைசி தேதி 17 நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.  

ஐடிபிஐ வங்கியின் (Industrial Development Bank of India), எக்ஸிகியூட்டிவ் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இதுவாகும்.

மேலும் படிக்க | NABARD Recruitment: நபார்ட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

இந்த ஆட்சேர்ப்பு (IDBI Bank Recruitment 2022) செயல்முறை மூலம் மொத்தம் 1544 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. 1,044 நிர்வாகிகள் மற்றும் 500 உதவி மேலாளர் கிரேடு ஏ பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (IDBI Recruitment 2022) இன்று இறுதி நாள் என்பதால் அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து உடனே விண்ணப்பிக்கவும்.

பணியிட விவரங்கள்: 
நிர்வாகி பணியிடம் - 1,044 (UR-418, SC-175, ST-79, EWS-104, PH- 41).
உதவி மேலாளர் கிரேடு A பணி (PGDBF) - 500 (UR-200, SC-121, ST-28, OBC-101, EWS-50, PH-20).

மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!

கல்வித்தகுதி:

எக்ஸிகியூட்டிவ் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் உயர்கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

எக்சிகியூட்டிவ் பதவிகளுக்கான (IDBI Assistant Manager Recruitment 2022) வயது வரம்பு: 2022 ஏப்ரல் முதல் நாளன்று  20 வயதுக்கு குறைவானவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 

உதவி மேலாளர் பணி: வயது 2022 ஏப்ரல் முதல் நாளன்று, 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சம்பளம் விவரம்
இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலாண்டில்  29,000 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் ரூ. 31,000 ரூபாய் சம்பளம் என்றும் மூன்றாம் ஆண்டு முதல் 34,000 ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

உதவி மேலாளர் சம்பளம்:

9 மாத பயிற்சி காலத்திற்கு மாதம் 2,500 ரூபாய்
3 மாத இன்டர்ன்ஷிப் காலத்தில் மாதம் 10,000 ரூபாய்
பணியில் அமர்ந்த பிறகு மாதம் 36,000 ரூபாய்

மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News