HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

HCL நிறுவனத்தில் பி.இ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 5, 2022, 11:04 AM IST
  • பி.இ. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
  • HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) தற்போது Technical Lead (Engg – S/W & S/W Product Engg) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்ச அனுபவமாக 4.5 ஆண்டுகள் முதல் அதிகபட்ச அனுபவமாக 8 ஆண்டுகள்வரை முன் அனுபவம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் படிக்க | ஜூலை மாதத்தில் மூன்று முறை ராசியை மாற்றும் புதன், யாருக்கு சாதகம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.hcltech.com/jobs/technical-lead-7 என்ற தளத்துக்கு சென்று அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து 09.07.2022ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News