10ஆவது முடித்திருந்தால் போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 13, 2022, 04:40 PM IST
  • பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு
  • 10ஆவது படித்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
10ஆவது முடித்திருந்தால் போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை title=

பாதுகாப்பு அமைச்சகம் தற்போது Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughtsman ஆகிய பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலிப் பணியிடங்கள்:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughtsman ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 174 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

அதாவது,

Material Assistant – 03
Lower Division Clerk (LDC) – 03
Fireman – 14
Tradesman Mate – 150
MTS (Gardener) – 02
MTS (Messenger) – 01
Draughts Man – 01 என்ற விகிதத்தில் காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Material Assistant பணிக்கு Material Management பாடப்பிரிவில் Diploma / Engineering / Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk (LDC) பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சம் 25 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Tradesman Mate மற்றும் MTS பணிக்கு ரூ.18,000

Lower Division Clerk (LDC) மற்றும் Fireman பணிக்கு ரூ.19,900

Draughtsman பணிக்கு ரூ.25,500

Material Assistant பணிக்கு ரூ.29,200 வழங்கப்படும் 

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி தேர்ச்சி

உடற்தகுதி தேர்வு

எழுத்துத் தேர்வு

நேர்காணல் ஆகிய முறைகளி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் இந்த இணைப்புக்கு சென்று அதில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளான 16ஆம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News