ஜூன் மாதத்தில் வரும் நிர்ஜலா ஏகாதசி, பீம்சேனி ஏகாதசி நோன்பு...!

இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜூன் 2 சிறப்பு வாய்ந்தது, அன்று இரண்டு முக்கியமான நோன்புகள் நோற்கப்படும் என்பதோடு, கத்தரி வெயிலும் முடிவுக்கு வருகிறது...  

Last Updated : May 31, 2020, 12:06 PM IST
ஜூன் மாதத்தில் வரும் நிர்ஜலா ஏகாதசி, பீம்சேனி ஏகாதசி நோன்பு...! title=

இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜூன் 2 சிறப்பு வாய்ந்தது, அன்று இரண்டு முக்கியமான நோன்புகள் நோற்கப்படும் என்பதோடு, கத்தரி வெயிலும் முடிவுக்கு வருகிறது...  

புதுடில்லி: வரவிருக்கும் ஜூன் 2 மூன்று வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஜூன் இரண்டாம் தேதியன்று நீர் அருந்தாமல் இருக்கும் நோன்பான நிர்ஜலா ஏகாதசி மற்றும் பாண்டவ ஏகாதசி எனப்படும் பீம்சேனி ஏகாதசி விரதம் நோற்கப்படும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த விரதமானது, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று கடைபிடிக்கப்படும்.   

உண்மையான பக்தியுடன் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஆண்டு முழுவதும் 12 மாதங்களில் வரும் அனைத்து ஏகாதசி விரதங்களை இருந்த பலன்களைப் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கையாகும்.  

இந்த நோன்பின் முக்கியத்துவத்தை மகரிஷி வேத வியாசர் பாண்டவர்களில் ஒருவரான பீமரிடம் கூறியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அன்று விரதம் இருக்கும்போது, நீர் அருந்தாமல் இருக்கவேண்டும் என்பதை பீமனுக்கு வியாச முனிவர் எடுத்துரைத்ததால், இந்த ஏகாதசி பீமசேனி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

அகிலாண்டத்தையே காத்து ரட்சிக்கும் விஷ்ணுவின் மனதை குளிரச் செய்து அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக எல்லா கடவுளர்களும், பேய்கள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னர்கள், நவகிரகங்கள் என அனைவரும் ஏகாதசி நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.

உணவு மற்றும் நீரைத் தவிர்த்து, கடவுளின் நாமத்தை ஜெபித்து இந்த  இந்த நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட முடியும் என்றும், பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கையாகும்.

வழக்கமான விரதங்களை விட நிர்ஜலா ஏகாதசி சிறந்தது என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன? இந்த விரதம் நீரை தவிர்ப்பதை பிரதானமாக கொண்டது.  பிற விரதங்களின்போது உணவருந்தாவிட்டாலும், நீரை மட்டுமாவது பருகுவார்கள். ஆனால் நிர்ஜலா ஏகாதசியன்று உண்ணாவிரதம் மட்டுமல்ல, நீர், பானங்கள் போன்ற எதையும் பருகாமல் விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தைத் தொடங்கும் முதல் மாதத்தில் தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய விஷயம். நீரில்லாமல் இருக்கும் விரதம் என்பதால் தான், இந்த விரதம் மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இந்த விரதம் ஏகாதசி திதியில் சூரியன் உதித்தது முதல் அடுத்த நாள் துவாதசியன்று உண்ணாவிரதம் முடியும் வரை தொடரும்.

நிர்ஜலா ஏகாதசி விரதம் அனுசரிக்கும் முறைகள்... 

நோன்பு நோற்பவர், தசமி தினத்தன்று மாலையில் குறைந்த அளவிலான சாத்வீக உணவை உண்ண வேண்டும் (மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும்). ஏகாதசி நாளில், காலைக்கடன்களை முடித்த பிறகு காலையில் குளித்து, விரதம் ஏற்பதாக சங்கல்பம் செய்ய வேண்டும்.  விஷ்ணுவின் சிலைக்கு கங்கை நீரில் அபிஷேகம் செய்து  விளக்கு ஏற்றி வழிபடவும்.

மாலையில் விஷ்ணுவிற்கு விளக்கு ஏற்றி வணங்க வேண்டும்.  அப்போது, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஓத வேண்டும். துவாதசி நாளன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து விஷ்ணுவுக்கு இனிப்புப் பொருட்களை நிவேதனம் செய்யவும்.  சாத்தியப்பட்டால், பிராமணர்களுக்கு உணவு மற்றும் தானம் வழங்கவும், நன்கொடை அளிக்கவும்.

கத்தரி வெயில் முடிவடையும்... 

இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் சூரியன், ரோஹினி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த முறை, ஆனி மாத வளர்பிறையன்று  அதாவது மே 25ஆம் நாளன்று, சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.  அவர், ஜூன் 8 வரை இந்த அங்கேயே இருப்பார். சூரியன் இடம் மாறியவுடன், 9 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இது கத்திரி வெயில் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த நேரத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக பூமியில் விழுகின்றன. ஆனால் இந்த முறை சுக்கிரனின் தாக்கம் குறைவாக இருக்கும். எனவே, ஜூன் 2 ஆம் தேதியுடன் கத்தரி வெயில் முடிவடையும் என்பதால் வெப்பமும் குறையும்.  

கத்தரி வெயிலின் போது, ​​பெண்கள் தங்கள் கைகளுக்கும் கால்களுக்கும் மருதாணி இட்டு, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.  மருதாணியின் குளிர்ச்சியானது, கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த நாட்களில், தண்ணீரை மக்கள் அதிகமாக குடிப்பார்கள்.  இந்த கத்தரி வெயிலில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்ற நிலையில், நீரை தவிர்த்து, உணவையும் தவிர்த்து ஒரு நாள் முழுவதும் விரதம் இருப்பது இந்த விரதத்தின் மகிமையாகும்.  விரதம் இருப்பவர்கள், நீரில்லாமல், உணவில்லாமல் இருந்த பிறகு, அதன் முக்கியத்துவத்தை உளமாற உணர்ந்து, பிறருக்கு அன்னத்தையும், பிற பொருட்களையும் தானமாக வழங்கி மகிழ்கின்றனர்.

Trending News