Ration Card: நீக்கப்பட்ட பெயரை சேர்ப்பது எப்படி ..!!

ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் உங்கள் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க இந்த எளிய முறையை கடைபிடிக்கலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2021, 03:03 PM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி
  • சில நேரங்களில் சில காரணங்களால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.
  • ரேஷன் கார்டில் பெயரை மீண்டும் சேர்க்கலாம்.
Ration Card: நீக்கப்பட்ட பெயரை சேர்ப்பது எப்படி ..!! title=

Ration Card: ஆதார் எண் இணைக்காதது உள்ளிட்ட பல வித காரணங்களுக்ககாக ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன. ரேஷன் கார்ட்டில் இருந்து உங்கள் பெயரும் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் உங்கள் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்கலாம். அதற்கான எளிமையான வழிமுறையை அறிந்து கொள்ளலாம். 

ரேஷன் கார்டில் இருந்து பெயர் ஏன் நீக்கப்படுகிறது?

ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, வேறு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அல்லது உங்கள் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பெயரை நீக்கலாம். உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் இறந்த பிறகும், உங்கள் பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்கலாம். ஆனால், அதற்காக நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. ரேஷன் கார்டுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் நீங்கள் மீண்டும் ரேஷன் கார்டை பெறலாம். மேலும், திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பெயரையும் அல்லது குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் பெயரையும் சேர்க்கலாம்.

ALSO READ | Ration Card தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்யலாம்..!!

ரேஷன் கார்டில் உங்கள் பெயரை சேர்க்கும் முறை:

1. சில காரணங்களால் பயனாளியின் பெயர் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டால், ஆதார் அட்டை மற்றும் உங்கள் பெயரைச் சேர்க்க விரும்பும் ரேஷன் கார்டின் நகலை எடுத்துக் கொண்டு, உங்கள் அருகிலுள்ள சிஎஸ்சி மையம் அல்லது இதற்கான பொது சேவை மையத்திற்கு செல்லவும்.

2. இதற்குப் பிறகு அங்கிருந்து பெற்ற ரசீதை உங்கள் தாலுகாவில் சமர்ப்பிக்கவும். சில நாட்களுக்குப் பிறகு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் சேர்க்கப்படும்.

இது தவிர மேலும் இரு சந்தர்ப்பங்களில் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயர்கள் இரண்டு வழிகளில் சேர்க்கப்படுகின்றன. முதலில், புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் இரண்டாவதாக திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பெயர்

1. முதலில், நீங்கள் இருவரும் தனித்தனியாக ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டும் அல்லது உங்கள் மனைவியின் ஆதார் அட்டையில் தகவலை திருத்த வேண்டும்.

2. ஆதார் அட்டையில், பெண்ணின் தந்தைக்கு பதிலாக, கணவரின் பெயரை உள்ளிடவும்.

3. இப்போது உங்கள் மற்றும் மனைவியின் ஆதார் அட்டையை, உங்கள் தாலுகாவில் உள்ள உணவுத் துறை அதிகாரியிடம் கொடுங்கள்.

4. ஏற்கனவே இணைக்கப்பட்ட ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரை நீக்கி விட்டு, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும். 

5. உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க விரும்பினால், பொது வசதி மையத்திற்கு சென்று மனைவியின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவும்

6. ஆன்லைன் மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, மனைவியின் பெயர் சேர்க்கப்படும்.

ALSO READ | மக்களுக்கு சுமை வேண்டாம்! பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் ரத்து -முதல்வர் அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News