High Screentime Leads To Weight Gain: இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள், புத்தகங்களை படிப்பதை விட அதிகமாக நாம் மொபைல், லேப்டாப், தொலைக்காட்சிகள்தான் பார்க்கிறோம் எனலாம். இந்தியர்களின் ஸ்கிரீன்டைம் என்பது ஒருநாளுக்கு 7.3 மணிநேரம் ஆக உள்ளது. அதிக ஸ்கிரீன்டைமிற்கு முக்கிய காரணம் இணையப் பயன்பாடாகும்.
2024ஆம் ஆண்டின்படி 75.15 கோடி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 52.4 சதவீதம் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் எனலாம். அந்த சீன மக்களின் ஸ்கிரீன்டைம் 5.3 மணிநேரமாகவும், அமெரிக்க ஸ்கிரீன்டைம் 7.1 மணிநேரமாகவும் இருக்கும் சூழலில் இந்தியர்களின் ஸ்கிரீன்டைம் 7.3 மணிநேரமாக இருக்கிறது.
தொலைக்காட்சியும், மொபைலும்
அதாவது, இதுபோன்று ஸ்கிரீனை அதிகமாக பார்ப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வுகளும், மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். 2017இல் அமெரிக்காவில் இருந்த 10-15 வயது சிறுவர்களில் 60 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது, அதில் அவர்கள் அனைவரும் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்தது. எனவே, அதிக தொலைக்காட்சி பார்ப்பதால் சிறுவயதிலேயே உடல் எடை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தற்போது தொலைக்காட்சி உடன் மொபைலின் பயன்பாடும் அதிகமாக இருப்பதால் உடல் பருமன் ஆபத்தும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்
கலோரிகளை எரிப்பதே உடல் எடை குறைப்பாட்டில் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல்களை பார்ப்பதால் எவ்வித உடல் செயல்பாடும் இருக்காது, ஆற்றலும் பயன்படுத்தப்படாது, இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தெந்த பிரச்னைகள் வரும்
இதுகுறித்து உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், "செயலற்ற நிலையில் இருப்பதால் நமக்கு சாதாரண பசியின் சமிக்ஞையை சீர்குலைக்கும். இதனால், பசியே எடுக்காமல் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும் உணவுகள், பானங்களான சிப்ஸ், கார்ப்பனேடட் பானங்களின் சந்தைப்படுத்துதலின் காரணமாக உங்களின் ஸ்கிரீன்டைம் என்பது அதிகரிக்கலாம். ஸ்கிரீன்களை பார்ப்பதால் எடை அதிகரிக்காது, ஆனால் அதிகமாக ஸ்கிரீன்களை பார்த்துக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த செயலற்ற வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகமாகும்" என்கிறது.
நம்மில் பலரும் தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டும், மொபைல்களை பார்த்துக்கொண்டும் சாப்பிடுவதால் பசியே இல்லாமல் அதிகமாக உணவுகளை சாப்பிட நேரிடம். இத்தகைய செயல்பாடுகள் உடல் எடை அதிகரிப்புக்கு மட்டுமின்றி, அதிக கொலஸ்ட்ரால், ஹைப்பர்டென்ஷன், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றின் ஆபத்தையும் அதிகமாக்கும் என்கின்றனர்.
மேலும், ஸ்கரீனை பார்த்துக்கொண்டு சாப்பிடும் போது உணவை அதிகம் மெல்ல மாட்டோம் என்பதாலும் உடல்நிலை பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தினமும் ஸ்கிரீன்களை பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், ஸ்கிரீன்களை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இதனை பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இதற்கு Zee News எவ்வகையிலும் பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பவரா நீங்கள்...? இதனால் வரும் ஆபத்துகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ