புது தில்லி: நீங்கள் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) இன் எல்பிஜி சிலிண்டர் சந்தாதாரராக இருந்தால், இந்த செய்தியை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். எல்பிஜி சிலிண்டருக்கான கட்டணம் தொடர்பான சிறப்பு தகவல்களை HPCL வழங்கியுள்ளது.
இப்போது நீங்கள் எல்பிஜி சிலிண்டரை உங்கள் வீட்டில் டெலிவரி செய்யும் போது டெலிவரி பையனிடம் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
எல்பிஜி சிலிண்டர் டெலிவரி கட்டணத்தை நீங்கள் ஏன் செலுத்த வேண்டாம்?
சில ஊடக அறிக்கைகளில், தகவல் அறியும் உரிமையை (RTI) மேற்கோள் காட்டி, எரிவாயு சிலிண்டரை வழங்கும் நபருக்கு விநியோக கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தத் தேவையில்லை என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் இது பற்றி தெரிந்துகொள்ள விண்ணப்பிக்கப்பட்ட பின்னர் HPCL இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவது எரிவாயு விநியோகஸ்தரின் பொறுப்பு என்று HPCL தனது பதிலில் தெரிவித்துள்ளது. எந்தவொரு கட்டிடத்திலோ அல்லது கட்டிடத்தின் எந்தவொரு தளத்திலோ LPG கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) விநியோகத்திற்கு கட்டணம் செலுத்தப்படக்கூடாது. பில்லில் கொடுக்கப்பட்ட தொகையை மட்டுமே வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.
ALSO READ: LPG சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைப்பு; அதிர்ச்சியில் மக்கள்!
ஹைதராபாத்தைச் (Hyderabad) சேர்ந்த கரின் அன்சாரி என்பவர், தகவல் அறியும் உரிமையின் கீழ், இந்த கேள்வியை HPCL இடம் கேட்டார். டெலிவரி பையன் அவரிடம் கெஸ் சிலிண்டர் டெலிவரி செய்ததற்காக கூடுதல் பணம் கேட்டபோது அவர் இது பற்றி HPCL இடம் வினவினார்.
இந்த கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த மறுக்க முடியும் என்று HPCL தெரிவித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர்களை வழங்கும்போது எரிவாயு விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து விநியோக கட்டணங்களை வசூலிக்கலாம் என்ற எந்த விதியும் இல்லை. பில்லில் கொடுக்கப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக யாரும் வசூலிக்க முடியாது.
சிலிண்டரின் டெலிவரி சார்ஜ் உங்களிடமும் கேட்கப்பட்டால் என்ன செய்ய வெண்டும்?
உங்கள் விட்டில் சமையல் எரிவாயு கேஸ் (LPG Gas) சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது, டெலிவரிக்கான கூடுதல் கட்டணம் உங்களிடம் கேட்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் விநியோக நபர் அல்லது சமயல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருக்கு எதிராக புகார் அளிக்கலாம் என்று தகவல் அறியும் உரிமைக்கான பதிலில், நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
ALSO READ: ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR