அட…வீட்ட சுத்தம் செஞ்சப்ப Tea-Pot வடிவத்துல அடிச்ச 95 லட்சம் Jackpot!!

51 வயதான ஒரு நபர், லாக்டௌனில் தனது வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, அவர் வீட்டில் சுமார் 1,00,000 டாலர், அதாவது, 95 லட்சம் மதிப்புள்ள ஒரு தேனீர் கெட்டில் அதாவது டீ பாட் இருப்பதை கண்டறிந்தார்.  

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 9, 2020, 10:21 PM IST
அட…வீட்ட சுத்தம் செஞ்சப்ப Tea-Pot வடிவத்துல அடிச்ச 95 லட்சம் Jackpot!!
Photo Credits: Facebook

கொரோனா (Corona) காலத்தில் பல வினோதங்களை நாம் கண்டு வருகிறோம். பலரது வாழ்க்கையை இந்த தொற்றுநோய் பலவிதமாக புரட்டிப்போட்டுள்ளது.  அவ்வகையில் ஒருவருக்கு அவரது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு விஷயம் இந்த கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டௌனில் நடந்துள்ளது.

51 வயதான ஒரு நபர், லாக்டௌனில் தனது வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார். பல ஆண்டுகளாக எடுக்காத பழைய பொருட்களையெல்லாம் எடுத்து அவற்றை தேவையானவை தேவையில்லாதவை என பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் சுமார் 1,00,000 டாலர், அதாவது, 95 லட்சம் மதிப்புள்ள ஒரு தேனீர் கெட்டில் அதாவது டீ பாட் இருப்பதை கண்டறிந்தார்.  

ஆனால் முதலில் அவருக்கு, அந்த டீ-பாட்டின் உண்மையான மதிப்பு பற்றி தெரியவில்லை. அவர் அதை தொண்டு நிறுவனம் ஏதாவது ஒன்றுக்கு கொடுத்து விடலாம் என்று கூட யோசித்தார். அவர் வீட்டு பரணையில் தூசி படிந்த நிலையில் அந்த டீ பாட் இருந்தது.

அதை பரணையில் கண்டவுடன் முதலில் அதன் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வதற்காக அதை ஒரு ஏல இல்லத்தில் ஒரு நிபுணரிடம் எடுத்துச் செல்ல அந்ந்த மனிதர் முடிவு செய்தார்.

15cm அகலமான அந்த டீ பாட், 1735 மற்றும் 1799 க்கு இடையிலான கியான்லாங் காலத்திற்கு முந்தைய காலத்தது என்பது அங்கு அவருக்கு தெரிய வந்தது. அது ஒரு அரிய ஏகாதிபத்திய பெய்ஜிங்-பற்சிப்பி ஒயின் ஈவர் என்பதையும் அவர் கண்டறிந்தார். அதன் தற்போதைய மதிப்பு 1,00,000 டாலர்கள் என்று கூறப்பட்டபோது அந்த மனிதரால் அதை நம்ப முடியவில்லை.

ALSO READ: உங்கள் Fb மற்றும் ட்விட்டரில் Autoplay வீடியோக்களை Off செய்வது எப்படி?

"நான் அதை ஹான்சன்ஸுக்கு [ஏலதாரர்களுக்கு] எடுத்துச் சென்றபோது, ​​அதை மட்டும் எடுத்துச் செல்ல எனக்கு வெட்கமாக இருந்தது. அவர்கள் அதைக் கண்டு சிரிக்கக்கூடும் என்று எண்ணி அதனுடன் இன்னும் சில பொருட்களையும் நான் எடுத்துச் சென்றேன்" என்றார் 51 வயதான அந்த நபர்.

ஹான்சன்ஸ் ஏலதாரர்களின் (Hansan Auctioneers) சார்லஸ் ஹான்சன், கியான்லாங் காலத்தில் ஈவர்ஸ் மற்றும் டீபோட்டுகள் நாகரீகப் பொருட்களாகக் கருதப்பட்டன என்று கூறினார். 51 வயதான மனிதரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டீ பாட்டை கியான்லாங் பேரரசர் கையாண்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

"இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இது 18 ஆம் நூற்றாண்டின் ஒரு ஏகாதிபத்திய ஒயின் ஈவர், இது சீனாவில் (China) ஒரு அரண்மனையை அலங்கரித்திருக்கலாம்.  மேலும் இது சீன பேரரசராக கருதப்படும் கியான்லாங் பேரரசரால் உபயோகப்படுத்தப் பட்டிருக்கலாம்" என்று ஹான்சன் கூறினார்.

இந்த டீ-பாட் செப்டம்பர் 24 அன்று ஹான்சன் ஏலதாரர்களால் ஏலம் விடப்படும். இதன் உண்மையான மதிப்பு 20,000 டாலர் முதல் 40,000 டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் அரிதான தன்மை காரணமாக இது 1,00,000 டாலர் வரை கூட பெறலாம்.

இந்த டீப்பாட் தனது குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறப்பதற்கு முன்னர் அவரது தாயார் அதை அமைச்சரவையில் காண்பிப்பதாகவும் உரிமையாளர் கூறினார். இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் பணியமர்த்தப்பட்டிருந்த அவரது தாத்தா இதை சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு கொண்டு வந்திருக்கலாம் என்றும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: இப்படி பாத்துட்டே இருந்த எப்டி?... சாப்பிட எதாவது போடுங்க... கரடியின் கியூட் வீடியோ!!