காட் வாக்-ன் போது மயங்கி விழுந்த பிரேசில் மாடல் மறைவு

பிரேசில் சவ் பவ்லோ நகரில் நடைபெற்ற பேஷன் வாரத்தில், காட் வாக்-ன் போது மயங்கி விழுந்த பிரேசில்  மாடல் டேல்ஸ் சோர்ஸ் உயிரிழந்தார்.

Last Updated : Apr 28, 2019, 11:59 AM IST
காட் வாக்-ன் போது மயங்கி விழுந்த பிரேசில் மாடல் மறைவு title=

பிரேசில் சவ் பவ்லோ நகரில் நடைபெற்ற பேஷன் வாரத்தில், காட் வாக்-ன் போது மயங்கி விழுந்த பிரேசில்  மாடல் டேல்ஸ் சோர்ஸ் உயிரிழந்தார்.

‘ஒக்சா’ அமைப்பு சார்பில் நேற்று நடத்தப்பட்ட பேஷன் நிகழ்வில் மேடையில் காட் வாக் செய்து திரும்பியபோது டேல்ஸ் திடீரென மயங்கினார். அவர் மயங்கிய உடனே அவரை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனைக்கு சென்று அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்பை உறுதிசெய்துள்ள ஒக்சா நிறுவனம், டேல் சோர்ஸ் குடும்பத்துக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து கொண்டனர். 

Trending News