மானத்தை விட லேப்டாப் தான் முக்கியம்.. நிர்வாணமாக பன்றியை துரத்தி ஓடிய தாத்தா..!

பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, பன்றியை துரத்தி நிர்வாணமாக ஓடிய தாத்தா..!

Updated: Aug 8, 2020, 04:51 PM IST
மானத்தை விட லேப்டாப் தான் முக்கியம்.. நிர்வாணமாக பன்றியை துரத்தி ஓடிய தாத்தா..!

பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, பன்றியை துரத்தி நிர்வாணமாக ஓடிய தாத்தா..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. 

ஜெர்மனியில்ல் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களில் பலர் 'ஃப்ரீ பாடி கல்ச்சர்' (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை காலங்களில் ஆடை அணியாமல் பிறந்த கோலத்தில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் காற்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனை இயற்கைக்கு திரும்புதல் என பெருமை பீத்திக்கொள்கிறார்கள் அவர்கள். ஜெர்மனியின் பெர்லினில் உள்ள கிரன்வெல் வனப்பகுதியில் டீஃபெல்ஸி  என்ற அழகிய ஏரிக்கு வந்த பயணி தன்னை மறந்து இயற்கை சூழலை ரசித்துள்ளார். 

ALSO READ | இனி SIM வாங்க கடை பக்கம் போக வேண்டாம்... எல்லாம் ஹோம் டெலிவரி.!

இதையடுத்து,  ஏரியில் குளிப்பதற்காக தனது உடமைகள் அனைத்தையும் கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உணவு தேடி வந்த சில காட்டுப்பன்றிகள் இவரது பையை மோப்பம் பிடித்துள்ளது. அவரது, பையில் இருந்த  உணவுபொருட்களை சாப்பிட்டுள்ளது. குளித்துக் கொண்டிருந்த அவர் கரையைப் பார்த்த போது, பன்றிகள் பையை கவ்விக் கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவருக்கு பையில் விலையுர்ந்த லேப்டாப் இருந்தது நினைவிற்கு வந்தது. 

இதனால், பதற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதையும் மறந்து கரையை நோக்கி நீந்தி வந்துள்ளார். இவர் வருவதைப் பார்த்த பன்றிகள், லேப்டாப் பையை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு ஓட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பன்றியைப் பிடிக்க அவரும் இடுப்பில் ஓட்டு துணி கூட இல்லாமல், பன்றியை துரத்திச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடீல் லேண்டவுர் என்ற சுற்றுலா பயணி அப்படியே போட்டோ எடுத்து விட்டார். பின்னர், அந்த மனிதரின் அனுமதியோடு ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.