சுமார் 117,000 யூரோக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் காலணி..!

மாவீரனான நெப்போலியனின் காலணி ஒன்று சுமார் 117,000 யூரோ விலைக்கு ஏலம் போயுள்ளது!!

Last Updated : Dec 4, 2019, 01:41 PM IST
சுமார் 117,000 யூரோக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் காலணி..! title=

மாவீரனான நெப்போலியனின் காலணி ஒன்று சுமார் 117,000 யூரோ விலைக்கு ஏலம் போயுள்ளது!!

பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த மாவீரன் நெப்போலியனின்  பெருமை இந்த உலக வரலாற்றுப் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது காலணி ஒன்று 117000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

நெப்போலியன் ஒரு பெரிய காலணி சேகரிப்பை வைத்திருந்தார். அதை அவர் மான்ட்மார்ட்ரில் உள்ள பாரிஸ் ஷூ தயாரிப்பாளர்களான ஜாக்ஸிடமிருந்து வாங்கினார். செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்ட போது நெப்போலியன் அணிந்திருந்த ஒரு ஜோடி பூட்ஸ், தற்போது  பாரிஸில் 117,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இது அந்த பூட்ஸுக்கு நிர்ணயிக்கப்பட்டஆரம்ப மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிகம்.

கடந்த 1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் தோல்வியடைந்த பின்னர், அட்லாண்டிக் தீவில் நாடுகடத்தப்பட்ட பிரெஞ்சு பேரரசனான நெப்போலியனை பின்தொடர்ந்த, ஜெனரல் ஹென்றி கேடியன் பெர்ட்ராண்ட் குறிப்பிட்ட இந்த காலணியை மீட்டுள்ளார். இந்த பூட்ஸானது பிரிட்டிஷ் அளவீட்டில் ஏழு எனவும் ஏலதாரர்கள் கூறினார்.

இந்த காலணிக்கு 50,000 முதல் 80,000 யூரோக்கள் வரையே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் துவங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இறுதியாக எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு தொகைக்கு மாவீரன் நெப்போலியனின் பூட்ஸ்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News