அனைவருக்குமே குறுகிய காலத்தில் பெரிய தொகையை சேமிக்க ஆசை இருக்கும். அதற்கு சரியான இடத்தில் முதலீடு செய்வது அவசியமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து அதே நேரத்தில் அதிக லாபம் ஈட்ட விரும்பினால், தபால் நிலையத்தின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். அதன்படி நீங்கள் இந்த திட்டத்தில் பெரும் வருமானத்தைப் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி அரசின் உத்தரவாதமும் இந்த திட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது தபால் அலுவலகம் மற்றும் நாட்டின் பெரிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பற்றி விரிவாக இங்கே காண்போம். இந்த வட்டி விகிதம் 1 வருட காலக்கெடுவுடன் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவாக புரிந்துகொள்வோம்.
மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி
போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஃபிக்சட் டெபாசிட் பெறுவது மிகவும் எளிதானது:
போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஃபிக்சட் டெபாசிட் பெறுவதும் மிகவும் எளிதானது. நீங்கள் 1,2, 3, 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் ஃபிக்சட் டெபாசிட் பெறலாம். இந்த தகவலை இந்தியா போஸ்ட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதில், 1 ஆண்டுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 5.50 சதவீத வட்டியும், 5 ஆண்டுகள் வரை ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 6.70 சதவீத வட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தின் பலன்களை தெரிந்து கொள்வோம்.
போஸ்ட் ஆபிஸ் ஃபிக்சட் டெபாசிட்டின் நன்மைகள்
* முதலாவதாக, போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் அரசு உத்தரவாதம் உள்ளது.
* இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது.
* நீங்கள் ஆஃப்லைன் (பணம், காசோலை) அல்லது ஆன்லைன் (நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங்) மூலம் ஃபிக்சட் டெபாசி செய்யலாம்.
* ஒன்றுக்கு மேற்பட்ட எஃப்.டி திட்டங்கள் உள்ளது.
* இதில், 5 ஆண்டுகளுக்கு ஃபிக்சட் டெபாசி செய்வதற்கும் வரிவிலக்கு கிடைக்கும்.
* ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு ஃபிக்சட் டெபாசிட்டை எளிதாக மாற்றலாம்.
எந்த வங்கி எவ்வளவு வட்டி கொடுக்கிறது?
* பேங்க் ஆஃப் இந்தியா 1 வருடத்திற்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4.90 சதவிகிதம் மற்றும் 1 மற்றும் 2 வருட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 5.10 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
* எச்.டி.எஃப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 5.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
* பிஎன்பி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு 1 வருடம் வரை ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 5.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
* பேங்க் ஆஃப் பரோடா அதன் வாடிக்கையாளர்களுக்கு 1 வருடம் வரை ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 5% ரிட்டர்ன் வழங்குகிறது.
* ஐசிஐசிஐ வங்கி 1 வருட கால அவகாசத்துடன் ரூ 2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு சுமார் 5.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR