PUBG விளையாட்டில் வெற்றிப் பெற்றால் ₹1 கோடி வரை பரிசு!

சுமார் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகை கொண்டு இந்தியாவில் வருகிறது PUBG நிறுவனத்தின் ஆன்லைன் விளையாட்டு தொடர்!

Last Updated : Jan 14, 2019, 01:48 PM IST
PUBG விளையாட்டில் வெற்றிப் பெற்றால் ₹1 கோடி வரை பரிசு! title=

சுமார் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகை கொண்டு இந்தியாவில் வருகிறது PUBG நிறுவனத்தின் ஆன்லைன் விளையாட்டு தொடர்!

பிரபல ஆன்லைன் விளையாட்டான PUBG இந்தியாவில் சமீப காலமாக பிரபலமாகிறது. இந்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு PUBG நிறுவனம் இந்திய இளைஞர்களை மையப்படுத்தி ஆன்லைன் விளையாட்டு தொடரினை நடத்த முன்வந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிப்பெறும் நபருக்கு சுமார் ஒரு கோடி வரையிலான பரிசுதொகை வழங்கவும் PUBG நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு PUBG MOBILE Campus Championship 2018 என்னும் பெயரில் போட்டிகளை அறிவித்த PUBG, தற்போது PUBG Mobile India series 2019 என்னும் பெயரில் அடுத்த ஆன்லைன் தொடரினை அறிவித்துள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க விரும்பும் நபர்கள் PUBG Mobile India series 2019 என்ற தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.

வரும் ஜனவரி 21-ஆம் நாள் துவங்கும் இத்தொடருக்கான முன்பதிவு ஜனவரி 9-ஆம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி போட்டியாளர்கள் தங்களது பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் வெற்றிபெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ₹30,00,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசாக ₹10,00,000 , மூன்றாம் பரிசாக ₹5,00,000 என பத்தாம் பரிசு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் PUBG Rules என்ற தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News