EPFO Wage Ceiling Hike: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஏனெனில் இந்த மாதம் மத்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு, நாட்டின் கோடிக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) பெரும் பலனைப் பெறுவார்கள்.
இப்போது ரூ.15,000 அடிப்படை சம்பளத்தின் படி, ஓய்வூதியம் EPFO இல் கழிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்த அடிப்படை ஊதியத்தின் வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது. அதன் பிறகு பணியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள். இது தவிர, இபிஎஃப்ஓ -வில் சேர்வதற்கு நிறுவனங்களில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையும் 20 -இலிருந்து 10-15 ஆக குறையக்கூடும் என கூறப்படுகின்றது.
EPFO: 2014 இல் மாற்றம் ஏற்பட்டது
ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் குறைந்தபட்ச ஊதிய உச்சவரம்பு கடந்த 2014 இல் மாற்றப்பட்டது. அப்போது ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படை சம்பளம் ரூ.6500 ஆக இருந்தது. பின்னர் அது ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பத்து வருடங்கள் ஆகியும் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் மதிப்பாய்வு செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்புடன் இபிஎஃப் இல் சேருவதற்கான ஊழியர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் தேவை என்று அரசாங்கம் நம்புகிறது.
Employee Provident Fund: இபிஎஸ் தொகை இரட்டிப்பாகும்
ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ், ஊழியர் மற்றும் முதலாளி / நிறுவனம் என இரு தரப்பிலிருந்தும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) பங்களிக்கப்படுகின்றது. ஊழியரின் இபிஎஃப் தொகையில் (EPF Amount) 12 சதவீதம் அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. எனினும், நிறுவனம் செலுத்தும் தொகையில், 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கில் (EPS Account) செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. குறைந்தபட்ச சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், இபிஎஸ்ஸில் டெபாசிட் செய்யப்படும் தொகை அதற்கேற்ப இரட்டிப்பாகும்.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்
- சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎப் பங்களிப்பு அதிகரிக்கும்.
- இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றினால் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படும்.
- இதனால், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதிக தொகை கிடைக்கும்.
- இது தவிர, சம்பள வரம்பு அதிகரிப்பால், அதிகமான ஊழியர்கள் அதன் வரம்பிற்குள் வர வாய்ப்பு கிடைக்கும்.
- இதன் மூலம் இபிஎஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) எண்ணிக்கை அதிகமாகி, அதன் மூலம் அரசு, ஊழியர்கள் என இரு தரப்பினரும் பயனடைவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ