ரயில் பயணிகள் கவனத்திற்கு..இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்

Train Ticket: ரயிலில் உங்களின் உடைமைகள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுவிட்டால் கவலை வேண்டாம் சுலபமாக இதனை மீண்டும் திரும்ப பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 8, 2022, 12:10 PM IST
  • ரயில் பயணிகள் கவனத்திற்கு.
  • RPF காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு..இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள் title=

இந்தியாவில் பொதுமக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு நாளும் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்தை இந்திய ரயில்வே கடந்து செல்கிறது. தொலைதூரப் பயணமாக இருந்தாலும் சரி, குறுகிய தூரப் பயணமாக இருந்தாலும் சரி, ரயிலில் பயணம் செய்வதை மக்கள் மிகவும் வசதியாகக் கருதுகிறார்கள். இருப்பினும் பெரும்பாலான ரயில்களில் பயணிகளின் உடமைகள் திருடப்படும் சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு விட்டால் இனி கவலை கொள்ள வேண்டாம். ஏன் என்பதை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்
ஓடும் ரயில் அல்லது ரயில் நிலையத்திலிருந்து உங்கள் சாமான்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்குப் பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் உள்ளன. அதன்படி ரயில்வே வழங்கிய விதிகளின்படி, திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பைத் தீர்மானித்த பிறகு, அதற்கான இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரவு, டிஏ அரியர் சமீபத்திய அப்டேட் 

எப்படி தொடர்பு கொள்வது
இந்திய ரயில்வேயின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, லக்கேஜ் திருட்டு, கொள்ளை நடந்தால், பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் அல்லது ஜிஆர்பி எஸ்கார்ட்களை அணுகலாம். அவர்கள் உங்களுக்கு FIR படிவத்தை கொடுப்பார்கள், அதை நீங்கள் சரியாக பூர்த்தி செய்து அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின் புகாரை பெற்றுக் கொண்டு காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம், ரயில்வே முக்கிய அப்டேட்

அதே நேரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையானது, ஆபரேஷன் அமனாட்டின் கீழ், பயணிகள் தங்கள் தொலைந்த லக்கேஜ்களை எளிதாக திரும்பப் பெறுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அந்தந்தப் பிரிவுகளின் RPF பணியாளர்கள் தொலைந்த லக்கேஜின் தகவலை தங்கள் ரயில்வே மண்டலத்தின் இணையதளத்தில் பதிவேற்றுகிறார்கள். 

மேலும் நீங்கள் இழந்த பொருட்களின் விலையை கணக்கீடு செய்து ரயில்வே வாரியம் உங்களுக்கு அந்த இழப்பீடு தொகையை வழங்கும். மேலும் பயணிகளின் நலனுக்காக இது போன்ற பல வசதிகளை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடித்தக்கது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News