15 நாட்களில் புதிய Ration Card பெறலாம்; என்னென்ன ஆவணங்கள் தேவை

புதியதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி தனியாக பிரித்து கார்டு வாங்குவது என்ற விவரத்தை முதலில் தெரிந்து கொள்வோம். இதற்கு

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2022, 09:58 AM IST
  • ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்
  • 15 நாட்களில் ரேஷன் கார்டை பெறமுடியும்
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய்
15 நாட்களில் புதிய Ration Card பெறலாம்; என்னென்ன ஆவணங்கள் தேவை title=

ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் பலவற்றை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன் பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். ஆனால் தற்போது 15 நாட்களில் ரேஷன் கார்டை பெறமுடியும். அத்துடன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு பெற முடியும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்
* முதலில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
* அங்கு முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
* பிறகு திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.
* பின்னர் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
* நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 எம்பி அளவில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
* பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
* பின்னர் நீங்கள் 'கன்ஃப்ர்ம்' என்ற பொத்தனை கிளிக் செய்ய வேண்டும்.
* கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பிடல் எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இது தொடர்பாக சரிபார்ப்பு செய்துப் பிறகு 15 நாட்களுக்குள் நீங்கள் ரேஷன் கார்டை பெறலாம்.

மேலும் படிக்க | Ration Card: மக்களே உஷார், இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

தேவையான ஆவனங்கள்
ரேஷன் கார்டுக்கு அப்லை செய்ய வேண்டுமானால் ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்றவற்றை வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆவணங்கள் இருந்தாலே போதுமானது உங்களுக்கு ரேஷன் கார்டு 15 - 20 நாட்களில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

ரேஷன் கார்டு யாருக்கு கிடைக்கும்?
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தியக் குடிமகன் மற்றும் ஏற்கனவே இந்த அட்டை இல்லாத நபர் மட்டுமே ரேஷன் கார்டை பெற முடியும். ரேஷன் கார்டு பெற குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பெற்றோரின் ரேஷன் கார்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு குடும்பத்தில் ஒரு ரேஷன் கார்டு மட்டுமே இருக்க முடியும், அது குடும்பத் தலைவரின் பெயரில் மட்டுமே இருக்கும். அதேபோல் ஆண்டு வருமானம் 27000 ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பத்திற்கு மட்டுமே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். 

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News