SBI ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்

ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது ஏற்படும் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை வங்கி தற்போது மாற்றியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2022, 01:07 PM IST
  • எஸ்பிஐ சிறப்பு வசதிகளை அளித்து வருகிறது
  • 10,000 மற்றும் அதற்கு மேல் எடுக்க OTP கட்டாயம்
  • OTPயின் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
SBI ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம் title=

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஏடிஎம் மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க வங்கி சிறப்பு வசதியை எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது. உண்மையில், எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீங்களும் ஏடிஎம் மோசடியைத் தவிர்க்க விரும்பினால், வங்கியின் இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த எஸ்பிஐ இன் புதிய விதியின்படி, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாது. இதில், பணம் எடுக்கும்போது, ​​வாடிக்கையாளர்களின் மொபைல் போனில் ஓடிபி அனுப்பப்படும், அதை உள்ளிட்ட பிறகே, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.

மேலும் படிக்க | அமேசானையே அலறவிட்ட ஹேக்கர்ஸ்!- நெட்டிசன்ஸ் ஷாக்!

வங்கி முக்கிய தகவலை அளித்துள்ளது
எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்கள் ஓடிபி அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறையில் மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசி என்றும் வங்கி தெரிவித்துள்ளது. மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஓடிபி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த தகவல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

புதிய விதி என்ன தெரியுமா?
10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு இந்த விதிகள் பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுத்தால் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு பின்னுக்கு அனுப்பப்படும் ஓடிபி ஐ அனுப்புகிறது. எனவே அதன் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்வோம்.

* எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி தேவைப்படும்.
* இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
* இந்த ஓடிபி ஆனது நான்கு இலக்கு எண்ணாக இருக்கும், அதை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறுவார்.
* நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் ஓடிபி ஐ உள்ளிடுமாறு கேட்கப்படும்.
* வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி ஐ பணம் எடுக்க இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க | இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News