குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவர் திருமணம்!

உறவினர்கள் மற்றும் தனது குடும்ப விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வாரணாசி நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!!

Last Updated : Jul 4, 2019, 03:03 PM IST
குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவர் திருமணம்! title=

உறவினர்கள் மற்றும் தனது குடும்ப விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வாரணாசி நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!!

"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், தனது குடும்ப உறவுகளின் விருப்பத்திற்கு மாறாக ஒரே பாலினத்தவரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டு உறவினர் சகோதரிகள் தங்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெண்கள் தங்கள் திருமணத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் புனித நகரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இது வாரணாசியில் நடந்த முதல் ஒரே பாலின திருமணம். ரோஹானியாவில் வசிக்கும் சிறுமிகள் புதன்கிழமை ஒரு சிவன் கோயிலுக்கு சென்று அங்கிருந்த அர்ச்சகரிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், இதற்க்கு அந்த பூசாரி மறுத்துள்ளார். ஆனால், அந்த சிறுமிகள் இருவரும் அந்த பூசாரியின் மனம் மாறும் வரை அவர்கள் கோயிலுக்குலேயே அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிந்த பெண்கள், 'சிவப்பு துப்பாட்ட' (red chunni) அணிந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிவடைந்த நேரத்தில், கோவிலில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்கு முன் சிறுமிகளை வெளியேறினர்.

அங்கு கூடியிருந்த சிலர் பூசாரி திருமணத்தை உறுதிப்படுத்தியதாக விமர்சித்தனர். அர்ச்சகர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; சிறுமிகளில் ஒருவர் கான்பூரைச் சேர்ந்தவர் என்றும், தனது உறவினருடன் படிப்பைத் தொடர இங்கே தங்கியிருப்பதாகவும் கூறினார். 

 

Trending News