SBI Platinum Deposits: இந்த தேதிக்குள் டெபாசிட் செய்தால், பம்பர் வட்டியுடன் பல நன்மைகள்

வங்கி அளித்த தகவலின்படி, எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் (SBI Platinum Deposits) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் சிறப்பு வைப்புத் திட்டமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 01:40 PM IST
  • SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் சிறப்பு வைப்புத் திட்டமாகும்.
  • வங்கி இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது.
SBI Platinum Deposits: இந்த தேதிக்குள் டெபாசிட் செய்தால், பம்பர் வட்டியுடன் பல நன்மைகள் title=

State Bank of India News: இந்திய ஸ்டேட் வங்கி 75 வது சுதந்திர தினத்தையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி சிறப்பு டெபாசிட் திட்டத்தை (Special Deposit Scheme) தொடங்கியுள்ளது.

வங்கி அளித்த தகவலின்படி, எஸ்பிஐ (SBI) பிளாட்டினம் டெபாசிட் (SBI Platinum Deposits) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் சிறப்பு வைப்புத் திட்டமாகும். நீங்களும் அதிக லாபம் சம்பாதிக்க விரும்பினால், செப்டம்பர் 14 -க்கு முன் இந்த சிறப்பு வைப்புத்தொகையில் முதலீடு செய்யுங்கள். இந்த தகவலை எஸ்பிஐ ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வங்கி ட்வீட் செய்துள்ளது

“இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டை பிளாட்டினம் வைப்புகளுடன் (Platinum Deposits) கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. எஸ்பிஐ மூலம் கால வைப்பு (Term Deposits) மற்றும் சிறப்பு கால வைப்பு (Special Term Deposits) சலுகைகளைப் பெறுங்கள். இந்த சிறப்பு சலுகை 14 செப்டம்பர் 2021 வரை செல்லுபடியாகும்.”  என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ALSO READ: SBI Yono முக்கிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

சிறப்பு வைப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் (SBI Customers) 75 நாட்கள், 525 நாட்கள் மற்றும் 2250 நாட்களுக்கு பணத்தை வைப்பாக போட முடியும். 

2. மேலும், NRE மற்றும் NRO கால வைப்பு உள்ளிட்ட உள்நாட்டு சில்லறை கால வைப்புகள் (ரூ. 2 கோடிக்கும் குறைவாக) இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. இதன் கீழ், புதிய மற்றும் புதுப்பிப்பு வைப்புகளையும் செய்யலாம்.

4. மேலும் கால வைப்பு மற்றும் சிறப்பு கால வைப்பு திட்டங்களும் உள்ளன. 

5. NRE வைப்புத்தொகை 525 மற்றும் 2250 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ALSO READ: SBI Life: செப்.30 வரை உங்கள் பாலிஸியை அபராதமின்றி புதுப்பிக்க அரிய வாய்ப்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News