மணல் சிற்பம் செய்து ஸ்ரீதேவி-க்கு அஞ்சலி! Photo Inside!

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!

Last Updated : Feb 26, 2018, 11:04 AM IST
மணல் சிற்பம் செய்து ஸ்ரீதேவி-க்கு அஞ்சலி! Photo Inside! title=

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டுவரப்படுகிறது. மும்பையில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் ஸ்ரீ தேவியின் மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் வடித்துள்ளார்.

Trending News