சன்னி லியோன்னை அதிர்ச்சி படுத்திய தமிழ் ராக்கர்ஸ்!

நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள தி அன் டோல்ட் ஸ்டோரி வெப் சீரிஸும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2018, 04:02 PM IST
சன்னி லியோன்னை அதிர்ச்சி படுத்திய தமிழ் ராக்கர்ஸ்! title=

நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள தி அன் டோல்ட் ஸ்டோரி வெப் சீரிஸும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. 

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'-னின் வாழ்க்கை வரலாற்று தொடர் வெளியானது. இந்த ஹிந்தியில் வாழ்க்கை வரலற்றுத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொடரானது விரைவில் தமிழ் மொழியிலும் வெளியாக இருப்பதாக சன்னி லியோன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ் படங்கள், பாலிவுட்,ஹாலிவுட் என எந்த படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ், சன்னி லியோனின் ‘தி அன் டோல்ட் ஸ்டோரி’ வெப் சீரிஸும் வெளியிட்டுள்ளது.

Trending News