சிறிய முகம் பெறுவதற்காக விபரீத முயற்சி கையாண்ட மாடல் அழகி!

தான் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இல்லை.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Mar 14, 2019, 01:59 PM IST
சிறிய முகம் பெறுவதற்காக விபரீத முயற்சி கையாண்ட மாடல் அழகி!

தான் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இல்லை.

அதற்காக இயற்கையாக கிடைத்த உடல் வாக்கினையும், முகப்பொளிவினையும் செயற்கை சிகிச்சைகளாம் மாற்றிக்கொள்பவர்கள் தான் எத்துனை பேர். அதற்காக பிளாஸ்டிக் சர்ஜிரி, இடை குறைப்பு சிகிச்சை என எத்துனை பல அம்சங்கள் இருக்கின்றன.

இவற்றுள் புதியதொரு முயற்சியை கையாண்டு தனது முகத்தின் அளவை குறைக்க முற்பட்டுள்ளார் தாய்வானை சேர்ந்த மாடல் அழகி ஒருவர்.

உடல் உருவத்தையே மாற்றியமைக்கும் பிளாஸ்டிக் சர்ஜிரி முறைகள் தற்போது பிரபலமாகி வரும் நிலையில், இதற்கு மாற்று சிகிச்சையாய் அக்குப்பஞ்சர் முறையில் தனது முகத்தின் அளவை குறைத்துள்ளார்.

தாய்வான் நாட்டை சேர்ந்த BearGenie என்று அழைக்கப்படும் Belle Zhuo தான் இந்த விபரீத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். கடந்த புதன் அன்று தன் முகம் முழுவதும் ஊசியாள் குற்றி சிகிச்சை பெறும் புகைப்படத்தினை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படமானது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவை பார்த்த சில ரசிகர்கள்., BearGenie-னை தற்போது பார்க்க மிகவும் கொடூரமாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளனர். சிலர் BearGenie ஏற்கனவே அழகாக தான் இருந்தார், தற்போது ஏன் இந்த விபரீத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சிலர் வேடிக்கையாக 32 வயது முள்ளப்பன்றியை பார்பது போல் உள்ளது எனவும் பதிவிட்டுள்ளனர்.

bone-toning மசாஜினை தொடர்ந்து முகத்திற்கு அக்குப்பஞ்சர் செய்யும் வழக்கம் தற்போது தாய்வானில் ட்ரண்ட் ஆகி வருகின்றது. இதில் bone-toning என்பது மிகவும் வலி ஏற்படுத்தக்கூடியது. இந்த இரு முறைமைகளை BearGenie பறிட்சியித்து வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A real review vide 

A post shared by Korean Massage Yakson Beauty (@yakson_global) on

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி, கடந்த பிப்ரவரி மாதம் வரை BearGenie இந்த சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் வெளியான FHM-ன் Top 100 Sexiest Woman in Taiwan என்னும் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண் சிறிய முகம் கொண்டிருந்தார் எனவும், தானும் இந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற என்னத்தில் தனது முகத்தை சிறிதாக்க BearGenie, அக்குப்பஞ்சர் உதவியை நாடியதாகவும் தெரிகிறது.