ஸ்ரீகிருஷ்ணா ஜன்மாஷ்டமி; கீதை சொன்ன நாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள் இன்று...
சிறு குழந்தை உருவத்தில் கிருஷ்ணரை தங்களின் வீடுகளில் படையல் இட்டு அனைவரும் வரவேற்பு தரும் நாளே கிருஷ்ண ஜெயந்தி. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவர் கிருஷ்ணர். அன்றைய தினம் நம் வீட்டு செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார். இந்த குதுகல கொண்டாட்டம் நமது இந்து மதத்தின் தனிச்சிறப்பு.
அஷ்டமி திதியில் அவதாரம் செய்ததால் ஜென்மாஷ்டமி- பெயரிலேயே அஷ்டமி உள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் ஆவணி மாதம் பிறந்தவர்.
#Nepal: A Krishna temple in Lalitpur that was damaged by the earthquake in the year 2015 reopens after 3 years on the occasion of #Janmashtami. (02.09.2018) pic.twitter.com/SEpm8buA7f
— ANI (@ANI) September 3, 2018
இதையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் தயிர்ப்பானைகளை உயரத்தில் கட்டி வைத்து உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். வெண்ணையும் தயிரும் திருடித் தின்ற கண்ணன் புகழைப் பாடும் பக்தி கீதங்களும் முழங்க இளைஞர்கள் தோள் மீது ஏறி தயிர்ப்பானைகளை தட்டிச் சாய்த்தனர்.
Mathura: People offer prayers at Lord Krishna's 'Janmabhoomi' temple on the occasion of #Janmashtami pic.twitter.com/XpSFIsfVDw
— ANI UP (@ANINewsUP) September 3, 2018
இதே போல் மொரதாபாதில் உள்ள ராதா கிருஷ்ணா புகழ் மிக்க ஆலயத்திலும் கண்ணன்-ராதை வேடமிட்டு ஏராளமானோர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கோரக்பூரில் உள்ள கோரக்தாம் கோவிலிலும் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
வாரணாசியில் பெண்கல்வி மற்றும் பெண் அதிகாரத்தை வலியுறுத்தி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த கொண்டாட்டத்தில் பனாரஸ் பல்கலைக்கழக மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தால் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
Mumbai: Preparations underway for Dahi-Handi celebrations in Dadar. #Janamashtami pic.twitter.com/ci3ADGzBqw
— ANI (@ANI) September 3, 2018
மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணன் ஆலயமான இஸ்கானில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் களை கட்டியது. ஏராளமான பக்தர்கள் பக்தி கீதங்களை இசைத்தும் ஆடிப்பாடியும் கண்ணனை வழிபட்டனர்.
Mumbai: Preparations underway for Dahi-Handi celebrations in Dadar. #Janamashtami pic.twitter.com/7bluoZNJZB
— ANI (@ANI) September 3, 2018
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டுவருகிறது.